என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cricket Australia"
- ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ல் அறிமுகம் ஆன மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடைசியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.
ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது:-
கடந்த டி20 உலகக் கோப்பையின் முடிவில் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான எனது நாட்கள் முடிந்துவிட்டதாக நான் முழுமையாக அறிந்தேன். என்னுடைய ஓய்வு மற்றும் பயற்சியாளர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோரிடம் கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை நடததி வந்தேன்.
பயிற்சியாளர் என்பது எனது பார்வையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த வாய்ப்பு அளித்ததற்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன். பிக்பாஷ் உள்ளிட்ட பிரான்சிஸ் லீக் போட்டிகளில் விளையாடுவேன்.
இவ்வாறு மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
மேத் வேட் ஆஸ்திரேலிய அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக பணியாற்ற இருக்கிறார்.
- அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும்.
- 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியா -பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது தொடர்பான முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதிலும், எளிதாக்குவதிலும் எங்களால் ஒரு பங்கை ஆற்ற முடிந்தால், அதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதே உலக கிரிக்கெட்டுக்கான சவால் என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகள் முன்னேறும். அதுபோல ஒவ்வொரு தொடரிலும் இருக்க வேண்டும்.
வெள்ளை பந்து தொடருக்கும் இதே போன்ற ஒன்று தேவை. தரவரிசை மற்றும் இதர வழிகள் முறையே உலகக் கோப்பைகளுக்கான தகுதி இருக்க வேண்டும்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு இரு கிரிக்கெட் வாரியங்களின் கையில்தான் உள்ளது.
என்று நிக் ஹாக்லி கூறினார்.
- 2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்
- ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).
2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.
கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.
2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.
சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.
ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது இது முதல் முறையல்ல.
- அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியுள்ளது. அரசாங்கம் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிக்கையை வெளியிட்டது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் கட்டுப்பாடுகள் குறித்த ஆளும் தலிபான்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2021-இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்தது. விரைவில், விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதற்கு ஆஸ்திரேலியா கண்டனம் தெரிவித்தது. பின்னர் அந்த ஆண்டு நவம்பரில் ஹோபார்ட்டில் நடைபெறவிருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை வாரியம் ரத்து செய்தது.
தொடரில் இருந்து விலகுவதன் மூலம், ஆஸ்திரேலியாவின் சுழற்சிக்கான கடைசி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட 30 ஒருநாள் சூப்பர் லீக் புள்ளிகளை ஆப்கானிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா வழங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஐந்து முறை சாம்பியனான புள்ளிகள் இழப்பால் பாதிக்கப்படாது.
இந்த வார இறுதியில் தொடங்கும் முதல் மகளிர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் பெண்கள் அணி இல்லாத மற்றும் பிரதிநிதி பங்கேற்கும் அணி இல்லாத ஒரே முழு உறுப்பினர் நாடாக ஆப்கானிஸ்தான் குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பையில் தொடக்க சுற்றுடன் வெளியேறியது ஆஸ்திரேலியா
- ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அரையிறுதிக்கான வாய்பை இழந்து, ஏமாற்றத்துடன் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் சுற்றோடு வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதுபோல் அடுத்து வரும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட்டிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் ஓய்வு கேட்டதால் இடம் பெறவில்லை. அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சீன் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேமரூன் க்ரீன் இரண்டு தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டோன் அகர், ஆலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிட் ஹெட், மார்னஸ் லாபஸ்சேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, அலேக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அணியில் இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது பீல்டிங் செய்தபோது, ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் தொடரில் இருந்து விலகினார்.
ஆஸ்திரேலியாவில் கிரேடு அளவிலான தொடரில் விளையாடினார். டூம்புல் அணிக்காக விளையாடிய ரென்ஷா வின்னும்/மேன்லி அணிக்கெதிராக 273 பந்தில் 345 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தேசிய அணியில் இடம்கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால் முதல் தர கிரிக்கெட் தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் 8 இன்னிங்சில் 158 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்திருந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிராக 21, 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அணியில் கிடைக்குமா? என்பது சந்தேகமே...
அடுத்த ஆண்டு மார்ச் 29-ந்தேதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கிறது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29-ந்தேதியுடன் முடிகிறது.
இந்த தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறது. இதனால் ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர். பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. தடை அதே நிலையில் இருக்கும் என்று கூறி வீரர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கமும் இவர்களுக்கு ஆதரவாக இருந்து. ஓராண்டு தண்டனையை பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
டிசம்பர் 6-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதன்முறையாக இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவிடம் தொடரை இழந்தால் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தண்டனை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மூன்று பேரின் தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஸ்மித் மற்றும் வார்னருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பான்கிராப்டிற்கு 9 மாதமும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி சர்வதேச அளவில் திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் மூவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடையை நீக்க பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில்தான் சிட்னியை மையமாகக் கொண்ட நெறிமுறை மையம், ‘‘திமிரான போக்கு மற்றும் கிரிக்கெட்டை கட்டுக்குகள் வைத்துக் கொள்வது போன்ற கலாச்சாரத்தின் அடிப்படையில், எப்படியாக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களிடம் விதைத்ததே ஆட்சிமன்ற குழுதான்’’ என்று குற்றம்சாட்டியிருந்தது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான தலைவர்கள் தங்களை பதவிகளில் இருந்து விலகி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஆன வார்னே, இக்கட்டான நிலையில் தவிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று கூறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு சோதனைக் காலமாக அமைந்தது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடைபெற்றார்கள்.
அதன்பின் ஆஸ்திரேலியா ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன்மூலம் தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் போட்டியில் தோல்வியைச் சந்தித்து ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை இதேபோல் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் இதுபோன்ற மோசமான தோல்வியாக அது இல்லை.
இது ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது மிகக்குறைந்த ஸ்கோராகும்.
முதல் 10 ஓவரான பவர்பிளேயில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2001-ல் இருந்து சொந்த மைதானத்தில் மிகக்குறைந்த ஸ்கோரை (முதலில் பேட்டிங்) பதிவு செய்துள்ளது. 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்திருந்தது.
2018-ல் 11 போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகவும் மோசமான வருடம் இதுதான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்