என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cuddalore district"
- கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.
- கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
கடலூர்:
தமிழக அரசு துறை–களில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவி–யாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணி–யிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அறிவிப்பு வெளியி–டப்பட்டது. இதையொட்டி இந்த பணிக்காக தமிழகம் முழு–வதும் தேர்வு எழுத 22 லட்சத்து 2,942 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு இன்று (24-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகம் முழு–வதும் 316 தாலுகாகளில் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 99,437 பேர் எழுத விண்ணப்பித்தி–ருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வினை கண்காணிக்க 54 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது. 331 பறக்கும் படையினர் தீவிரமாக தேர்வினை கண்காணித்தனர். அதோடு 333 தேர்வு அறைகளுக்கு 342 வீடியோ கிராபர்கள் இந்த தேர்வினை பதிவு செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மையத்தில் பலத்த சோத–னைக்கு பின்னறே தேர்வு எழுதுவோர் அனு–மதிக்கப்பட்டனர். மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஒருவர் கால–தாமதமாக வந்தார். அவரை தேர்வு அலுவலர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தார். இதேபோன்று பலர் தாம–தமாக வந்தனர். அவர்களை அதிகாரிகளை–யும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. அனுமதிக்கவில்லை.
- கடலூர் மாவட்டத்தில் இன்று 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன.
- தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர்.
கடலூர்:
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழு வதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ கம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க–ப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்ப–ட்டன.
இதில் கடலூர் மாவட்ட–த்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங் கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளிகளில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் உள்ளதா? என்பதனை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவமாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.
அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாண வர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்ப றைக்கு அழைத்துச் சென்ற தையும் காணமுடிந்தது. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் மட்டும் நடந்தது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 19 இடங்களை தேர்வு செய்து துணை கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தக் குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து வெள்ளம் சூழக்கூடிய பகுதியை கண்டறிந்து அந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு 42 நிரந்தர தங்குமிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆபத்துக்களை உணர்ந்து 191 தற்காலிக தங்குமிடம் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை தாக்கினாலும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 245 ஜே.சி.பி எந்திரம், 167 மரம் அறுக்கும் கருவிகள், 91 ஆயிரம் மணல் மூட்டைகள், மக்களை மீட்கக்கூடிய ரப்பர் படகு, பைபர் படகு தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து வெள்ளம் சூழ்ந்து மக்களை பாதித்தால் அந்தப் பகுதிகளுக்கு 28 படகுகள் மற்றும் 56 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத் துறைமூலமாக மருத்துவ குழுக்கள், 35க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து புயல் தாக்கிய பின்பு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் கொடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் செயல்படுவதற்கும் அங்கு பணியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் மின்சார வசதி இல்லை என்றாலும் கண்டிப்பாக மருத்துவமனை மின்சார வசதியுடன் இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் ஒரு குழுவும் சிதம்பரத்தில் ஒரு குழுவும் பரங்கிப்பேட்டையில் ஒரு குழுவும் தங்கி உள்ளனர். மேலும் பேரிடர் காலத்தில் மீட்புக் குழுவில் ஈடுபட 117 காவலர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தி உள்ளோம்.
இதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. ஆகையால் கஜா புயல் பற்றி பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35), மாளிகைமேடுவை சேர்ந்த நிஷாந்தி(13), புதுவை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற வந்தனர்.
புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Denguefever
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே டாக்டர்கள் செய்த பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிதம்பரம் மீதிக்குடி ரமேஷ் (வயது 40), திருவந்திபுரம் சுப்பிரமணி (55), பாச்சாரப்பாளையம் ராஜசேகர் (24), காட்டுமன்னார்கோவில் குணமங்கலம் வசந்தகுமார் (20), செம்மண்டலம் காசிநாதன் மனைவி செல்வி (40), நெல்லிக்குப்பம் ரங்கநாதன் மகள் நித்தியஸ்ரீ (8), வல்லம்படுகை கச்சிராயர் மனைவி மணிமேகலை (50), நெய்வேலி கமலேஷ் (35) உள்பட 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த 10 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் முண் டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற வந்தனர்.
புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue
கடலூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 பேர் சமீபத்தில் மன்றப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கடலூர் மாவட்ட கெளரவ செயலாளராக இருந்த ஓ.எல். பெரியசாமி, விருத்தாச்சலம் நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருத்தாச்சலம் துணைச் செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் நீக்கப்பட்ட 10 பேரும் ரஜினிகாந்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதினர். சென்னை வந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மீண்டும் மன்றத்தில் இணைத்துக்கொள்வது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட மன்ற உறுப்பினர்கள் இனி மன்றப் பணிகளில் தலைவரின் ஆணைப்படி முழுமையாக ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட மன்ற உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இளவரசன் கேட்டுக்கொண்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மோட்டார் வாகன விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கரவாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 21,068 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 18,982 பேர் மீதும், கார்களில் இருக்கை பெல்ட் அணியாமல் சென்ற 6,715 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை உள்பட மோட்டார் வாகன விதிமீறல் குற்றங்களுக்காக மொத்தம் 65 ஆயிரத்து 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர மணல் கடத்தல் தொடர்பாக 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 663 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்து அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 90 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான ஒரு ஆண்டு கட்டணத்தை லாரி உரிமையாளர் சங்கம் செலுத்துவதை ஏற்றுக் கொண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் சரக்குகளை இறக்கப்பட்டதும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் லாரிகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் லாரிகள் ஸ்டிரைக்கால் சில லாரிகள் மட்டுமே சென்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் இயக்கப்படாததால் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து பொருட்கள் ஏற்றி செல்லும் 800 சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சரக்குகள் தேங்கி கிடக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டியில் இருந்து தினமும் கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு 100-க்கணக்கான லாரிகளில் முந்திரி பருப்பு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இன்று லாரிகள் ஓடாததால் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளரும், உற்பத்தியாளர் சங்க தலைவருமான ரமேஷ் தெரிவித்தார். #LorryStrike
தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.
கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்