search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்- கலெக்டர் அன்புச்செல்வன்
    X

    கடலூர் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்- கலெக்டர் அன்புச்செல்வன்

    கடலூர் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 19 இடங்களை தேர்வு செய்து துணை கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்தக் குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து வெள்ளம் சூழக்கூடிய பகுதியை கண்டறிந்து அந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு 42 நிரந்தர தங்குமிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆபத்துக்களை உணர்ந்து 191 தற்காலிக தங்குமிடம் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு செய்வதற்கு பொருட்கள் மற்றும் சமையல்காரர்கள், சமைப்பதற்கு பாத்திரம் தயார் நிலையில் உள்ளது.


    கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

    கடலூர் மாவட்டத்தை தாக்கினாலும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 245 ஜே.சி.பி எந்திரம், 167 மரம் அறுக்கும் கருவிகள், 91 ஆயிரம் மணல் மூட்டைகள், மக்களை மீட்கக்கூடிய ரப்பர் படகு, பைபர் படகு தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து வெள்ளம் சூழ்ந்து மக்களை பாதித்தால் அந்தப் பகுதிகளுக்கு 28 படகுகள் மற்றும் 56 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சுகாதாரத் துறைமூலமாக மருத்துவ குழுக்கள், 35க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    இதனைத்தொடர்ந்து புயல் தாக்கிய பின்பு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் கொடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் செயல்படுவதற்கும் அங்கு பணியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனைகளில் மின்சார வசதி இல்லை என்றாலும் கண்டிப்பாக மருத்துவமனை மின்சார வசதியுடன் இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் ஒரு குழுவும் சிதம்பரத்தில் ஒரு குழுவும் பரங்கிப்பேட்டையில் ஒரு குழுவும் தங்கி உள்ளனர். மேலும் பேரிடர் காலத்தில் மீட்புக் குழுவில் ஈடுபட 117 காவலர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தி உள்ளோம்.

    இதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. ஆகையால் கஜா புயல் பற்றி பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan
    Next Story
    ×