என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "David Warner"
- அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பட வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார்.
- புஷ்பா பட காட்சிகளை வார்னர் ரீல்ஸ் செய்து வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பட வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். குறிப்பாக இவரது நடனத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
புஷ்பா படம் இந்திய ரசிகர்களை மட்டுமில்லாமல் ஆந்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரையும் வெகுவாக கவர்ந்தது. புஷ்பா பட காட்சிகளை வார்னர் ரீல்ஸ் செய்து வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புஷ்பா ஸ்டைலில் வார்னர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், "எனது சகோதரருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
- பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தலைமை பதவி வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டு விட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு பால்-டாம்பரிங் (பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்துவது) குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து டேவிட் வார்னர் தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக மூன்று பேர் அடங்கிய அமர்வு, தடை நீக்கப்படுவதற்கான அனைத்து விதிளையும் டேவிட் வார்னர் பூர்த்தி செய்துள்ளதால் தடை நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வார்னர் மரியாதை மற்றும் வருத்தம் தெரிவித்ததாக அமர்வு தெரிவித்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டேவிட் வார்னர் இனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை வகிக்க முடியும். இதில் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக செயல்படலாம்.
- ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 26 சதங்கள், 37 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் மொத்தம் 8786 ரன்களை அடித்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினால் ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால், பிப்ரவரியில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து என் நண்பர்கள் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளனர்."
"எனவே உண்மையாகச் சொன்னால், இந்த தொடருக்கு நான் உண்மையிலேயே தேவைப்பட்டால், அடுத்த ஷீல்ட் போட்டியில் விளையாடி, தொடரில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். அவர்களுக்கு யாரேனும் தேவைப்பட்டால் என் கையை உயர்த்துகிறேன். நான் அதிலிருந்து விலகி செல்லப் போவதில்லை," என்று கூறினார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
- ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
டேவிட் வார்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டிலும், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இப்படி அறிவித்ததையடுத்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னருக்கு பதிலாக அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம் பெற்றுள்ளார்.
அவர் டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த டேவிட் வார்னருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "எங்கள் புரிதல் என்னவென்றால், டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என்பதை அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
- டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
- இதையடுத்து டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி, அதில் இரு சாம்பியன்கள் என பதிவிட்டுள்ளது.
ஐ.சி.சி. வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் விராட் கோலி ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இந்தப் பதிவின் மூலம் ஏற்கனவே ஓய்வை அறிவித்த வார்னருடன், விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என ஐசிசி வலியுறுத்துகிறதா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
- ஆஸ்திரேலிய அணிக்காக 18995 ரன்களை வார்னர் எடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உதை வாங்கியது.
இதனால் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் ஆஸ்திரேலியா 18995 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். ஆஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்ற அணியில் வார்னர் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரு டி20 உலகக் கோப்பை அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- கிறிஸ் கெயில் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.
பார்படாஸ்:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார்.
அவர் 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில் 3 கோல்டன் டக் அவுட் ஆகும்.
- ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற மிகப்பெரிய படங்களை இயக்கியவர் ராஜமௌலி. ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
ராஜமௌலி தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
அதில் டேவிட் வார்னரிடம் அவர் விளையாடும் மேட்சைப் பார்க்க டிக்கெட் டிஸ்கவுண்ட் கேட்கிறார். அதற்கு அவர் கிரெட் ஆப் இருந்தால் கிடைக்கும் என கூறுகிறார். அதற்கு ராஜமௌலி அது இல்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். அதற்கு டேவிட் வார்னர் அவருக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார்.
அதற்கு பிறகுள்ள காட்சிகள் மிக நகைச்சுவையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. டேவிட் வார்ன்ர் நம் இந்திய சினிமாவில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என காட்சி படுத்துயுள்ளனர். இந்த விளம்பர படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ரன்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலிஸ் 39 ரன்னும், டிம் டேவிட் 37 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 43 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
சிட்னி:
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலிஸ் 39 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட், மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கும் மேல் குவித்தது. டிம் டேவிட் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
- தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், டி20-யில் மட்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.
சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்து தரையிறங்கியது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் என்னடா? மைதானத்திற்குள் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது என அச்சமைடந்தனர்.
ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து டேவிட் வார்னர் ஹாலிவுட் பட பாணியில் ஒய்யாரமாக இறங்கி வந்தார். இதனால் ஆச்சர்யம் அடைந்த ரசிகர்களுக்கு டேவிட் வார்னர் ஏன் ஹெலிகாப்டர் மூலம் வர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.
டேவிட் வார்னரின் சகோதரர் திருமணம் ஹன்டர் பள்ளத்தாக்கில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட பிறகு போட்டி நடைபெறும் இடத்திற்கு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது இயலாத காரியம். இதனால் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார்.
கிரிக்கெட்டால் மட்டுமல்ல பொழுதுபோக்கு போன்ற செயல்களாலும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் டேவிட் வார்னர்.
- 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும்.
- அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும்.
உலகின் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னியில் நடந்த போட்டி அவரது கடைசி டெஸ்டாகும். தனது கடைசி இன்னிங்சில் அவர் 57 ரன்கள் எடுத்தார். 75 பந்தில் 7 பவுண்டயுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
37 வயதான வார்னர் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார். அவர் 112 டெஸ்டில் விளையாடி 8786 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.59 ஆகும். 26 சதமும், 37 அரை சதமும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 334 ரன் ஆகும். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் இந்த ரன்னை குவித்தார்.
வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதை அவர் சமீபத்தில்தான் அறிவித்தார். 20 ஓவர் போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்