search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvMI"

    • டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் (27 பந்தில் 84 ரன்), ஸ்டப்ஸ் (25 பந்தில் 48 ரன்), ஷாய் ஹோப் (17 பந்தில் 41 ரன்) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.

    பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது. இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.

    அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ரிசிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது திலக் வர்மா ரன்அவுட் ஆனார். அவர் 32 பந்தில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். அத்துடன் மும்பை அணியின் நம்பிக்கை வீணானது.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

    • மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரேசர் மெக்கர்க்- பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    3-வது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் மெக்கர்க் 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கர்க் 15 பந்தில் அரைசதம் விளாசினார். மேலும் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது.

    5-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் இரணடு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 20 ரன் கிடைத்தது.

    6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி அணி பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 7-வது ஓவரில் பொரேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்கர்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஓவர் த்ரோ மூலம் ஐநது ரன்கள் கிடைக்க டெல்லி 21 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மெக்கர்க் ஆட்டமிழந்தார். மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி 7.3 ஓரில் 114 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ரன் உயர்வு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பொரேல் 27 பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 12 ஓவரில் 150 ரன்னைத் தாண்டியது. ஷாய் ஹோப் ஐந்து சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.1 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரை வுட் வீசினார். இந்த ஓவரில் ஸ்டப்ஸ் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் விறாசினார்.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இநத் ஓவரில் ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
    • நாட் ஷிவர் பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடந்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ஷிகா பாண்டே, ராதா யாதவ் இருவரும் தலா 27 ரன்கள் அடித்தனர்.

    இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 13 ரன்களிலும், யஸ்திகா பாட்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 37 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஷிவர் பிரண்ட் அரை சதம் கடக்க, மும்பை அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. நாட்ஷிவர் பிரண்ட் 60 ரன்களுடனும், அமலியா கெர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்ததால், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. 

    • 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி அதிரடியாக ஆடியது.
    • மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கேப்டன் மெக் லேனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஷபாலி வர்மா 11 ரன், மாரிசான் கேப் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிகா பாண்டே- ராதா யாதவ் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது.

    ஷிகா பாண்டே 17 பந்துகளில் 3 சிக்சர், 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    மும்பை அணி தரப்பில் இஸ்சி வாங், ஹெய்லி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அமலியா கெர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×