search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead bodies"

    • குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
    • உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

    • பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் வசூல்.
    • பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத சடலங்கள் (பிணங்கள்) கேரள அரசுக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது.

    2008ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் இருந்து உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அன்று முதல் உரிமை கோரப்படாத 1,122 உடல்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் மாநில அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சாதகமாக உள்ளது. கற்பித்தல் நோக்கங்களுக்காக உடல்களைப் பெறுவது கடினமாக இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இது பயனளிக்கிறது.

    அதன்படி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிக எண்ணிக்கையிலான இறந்த உடல்களை விற்பனை செய்துள்ளது.

    கடந்த 16 ஆண்டுகளில் 599 உடல்களை மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. பட்டியலில் முதலிடத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகள் பரியாரம் மருத்துவக் கல்லூரி (166), திருச்சூர் மருத்துவக் கல்லூரி (157) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (99) ஆகும்..

    2000-களின் தொடக்கத்தில்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன.

    60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்காக 5 சடலங்கள் தேவை என்று விதி புத்தகம் கூறுகிறது. அதாவது மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவர்களுக்கும் ஒரு சடலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை இன்று தொடங்கியது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியானவர்களின் உடல்களில் மாணவி ஸ்னோலின், சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடல்கள் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் பதப்படுத்தி வைக்கப்பட்டன.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களையும் மறு பிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



    அதன்படி மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்தனர். அவை அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது.

    சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா, தமிழரசன் ஆகிய 6 பேரின் உடல்கள் அடுத்தடுத்த நாட்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்னோலின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கடந்த 3-ந்தேதி அவரது உடலையும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் பிரேத பரிசோதனையே செய்யாமல் இருந்த அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் கோர்ட்டு உத்தரவுக்காக தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஜிப்மர் டாக்டர் மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த 2 டாக்டர்கள் மேற்கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து உடல்களும் இன்று இரவுக்குள் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி உள்ளிட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது கடை பிடிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கப்பட்டது.

    ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் வினோத் மற்றும் தூத்துக்குடி மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  #thoothukudifiring

    ×