என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead body"

    • இந்த சம்பவம் கொலையா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் காடு குட்டை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொ ண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் கம்பிவேலி பகுதி அருகே ஆண் பிணம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு நிர்வாண கிடந்த ஆணின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும் என தெரிந்தது.

    உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும் இவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யபட்டரா? மதுபோதையில் யாராவது அடித்து கொன்று யாராவது உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? அல்லது போதை தலைக்கேறிய நிலையில் இறந்தாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.
    • பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி

    கோத்தகிரி அருகே தொட்டனி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது67). கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என செல்வமணி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டனிலிருந்து கனகாம்பை செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்ட முட்புதரில் காணாமல் போன பால்ராஜ் சடலமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தோகைமலை அருகே மரத்தடியில் சடலம் மீட்கபட்டது
    • இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47) கூலி தொழிலாளி. இவர் தோகைமலையில் உள்ள தனது அக்கா சந்திராவை பார்ப்பதற்காக சென்றார். இந்நிலையில் பாதிரிப்பட்டி ஒயின்ஷாப் செல்லும் சாலையில் மரத்தடியில் பெரியசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெரியசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    • சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்
    • செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்தவர் பச்சைமுத்து மகள் ஜோதி (வயது 50). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. வீட்டில் இருந்த இவர் திடீரென காணாவில்லை.உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் காணாததால், ஜோதியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.இந்நிலையில் பெருங்கொண்டான் விடுதி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்தது காணாமல் போன ஜோதி என உறுதிபடுத்திக் கொண்டனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் போலீசார் ஜோதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரியில் மிதந்த முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • விக்கிரமங்கலம் அருகே மாயமான வாலிபர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோரைக்குழி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 33). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் கோரைக்குழிக்கு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அங்குள்ள பெரிய ஏரியில் அன்பரசன் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பெரிய ஆறு பகுதியில் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, அடையாளம் தெரியாத 70 வயதான மூதாட்டி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    • கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் காவல் சரகத்திற்குட்பட்ட கோபாலட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துள்ள நபர் குங்கும நிற சட்டையும், கருஊதா பேண்ட்டும் அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    • மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கிருஷ்ணன்(வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கு விடுதியில் தங்கிருந்த அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பரவாய் கிராமத்திற்கு வந்தார்.இதையடுத்து கடந்த 8-ந் தேதி மாலை தனது தாய் உமாவிடம் அருகில் உள்ள வேப்பூர் கிராமத்திற்கு சென்று வருவதாக அவர் கூறி சென்றார்.ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பல இடங்களில் கிருஷ்ணனை தேடியும், அவர் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் உமா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று காலை பரவாய் கிராமத்தில் இருந்து ஆண்டி குரும்பலூர் செல்லும் சாலையில் புளியந்தோப்பு அருகில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.இதையடுத்து கிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தது கிருஷ்ணன்தான் என்று தெரிவித்தனர்.

    மேலும் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்துபோன கிருஷ்ணன் அவரது பெற்றோருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கறம்பக்குடி அருகே கிணற்றில் முதியவர் பிணம் மிதந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெகுநாதபுரம் கடைவீதிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புது விடுதி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மருத்துவமனை வளாகத்தில் முதியவர் இறந்து கிடந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சம்பவத்தன்று வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வைகைநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்தலை அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி பகுதி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராசு, கலைவாணி. இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா(வயது 16) ஆகிய இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் தேவிகா பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை தங்கராசு சுமார் 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவாத கூறப்படுகிறது,இந்நிலையில் வீட்டில் இருந்த தேவிகா காணவில்லை. 

    பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கிருஷ்ணவேணி புகார் செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய பாசன கிணற்றில் பிணமாக மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவிகாவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×