search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead floating fish"

    • நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது.
    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது. சுமார் 17.5 ஏக்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், கடந்த 2015–-20ம் ஆண்டுகளில், பொது மக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டு, குளத்தை சுற்றியும் பாதை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    அதையடுத்து, டெண்டர் விடப்பட்டு, குளத்தில் ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகள், வாத்துகள் ஆகியவை விடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால், இந்த குளம் நிரம்பி, தற்போதும் சுமார் 90 சதவீத கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மேலும், தற்போது, நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் குளக்கரையில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு, காலையும், மாலையும் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில், கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே.கே.நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாக்கடை வழியாக குளத்தில் கலக்கிறது. அத னால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால், குளத்தின் அருகே வசிக்கும் பொதுமக்கள் சுவசிக்க முடியாமல் கஷ்ட்டபட்டு வருகிறாகள்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன், கழிவுநீர் கலந்ததால், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுகாதார சீர்கேட்டையும், மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டு, குளத்தில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • ரசாயன கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படு கிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர் நாற்றம் வீசிவருகிறது. இதனால்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அம்மன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர்.
    • மேலும் இதுகுறித்து மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை அடுத்து நகராட்சி பொறியாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ், நகர தி.மு.க. துணைச் செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட பலர் மீன்கள் எப்படி செத்தன? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அலங்கார மீன் தொட்டி களில் தொட்டிகளை சுத்தம் செய்யும் டேங்க் பிஷ் எனப்படும் குறிப்பிட்ட வகை மீன்கள் அம்மன் குளத்திற்கு வந்து சேர்ந்தது எப்படி? அந்த வகை மீன்கள் மட்டும் மட்டும் இறந்து மிதப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இதுகுறித்து மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார். அதோடு செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி தூய்மை பணியா ளர்களைக் கொண்டு அகற்றும் பணியையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    • சண்முகம் இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது.
    • நேற்று முன்தினம் அந்த கிணற்றில் திடீரென 300-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிணற்றில் திடீரென 300-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. மேலும் கிணற்றின் தண்ணீரும் நிறம் மாறி, நீல நிறத்தில் காணப்பட்டது. இதனால் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாய கிணற்றில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    ×