என் மலர்
நீங்கள் தேடியது "deadbody"
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தேவனாம்பாளையம்-ராமம்பாளையம் பி. ஏ. பி. வாய்க்காலில் சுமார் 40 லிருந்து 55 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் எலும்புக்கூடாக கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, அவிநாசிபாளையம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வெள்ளை நிறத்தில், ரோஸ் கலரில் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு 94981 01329 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மகள் வீட்டுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
- பெரம்பலூர் அருகே பரபரப்பு
அகரம் சீகூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 80)இவர் தனது மகளை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வசிஷ்டபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக கணபதி வசிஷ்டபுரம் வந்தார். பின்னர் வெளியே செல்வதாக கூறி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகள், தந்தையை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தார்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் கிராம மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதை கண்டனர்.உடனே இது பற்றி குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல் துறையும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர்அதன் பின்னர் பார்த்தபோது கிணற்றில் சடலமாக மிதந்தவர் மாயமான கணபதி என்பது தெரியவந்தது.இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொண்டு கிணற்றில் வீசி விட்டார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே மகளின் வீட்டுக்கு வந்த கணபதி அகரம் சீகூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தியதை சிலர் பார்த்துள்ளனர்.இதனால் போதையில் நிலை தடுமாறி பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து மடிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மகள் வீட்டுக்கு வந்த முதியவர் 8 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுபான கடை அருகே உள்ள சாக்கடையில் வாலிபர் பிணம் கிடந்தது
- திருச்சி பொன்மலை உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி
திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38).இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையே குடிப் பழக்கத்திற்கும் ஆளானார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர்சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அரியலூர் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தில்லைநாயகம் படித்துறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
- கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி,
திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி உறையூரில் அடையாளம் தெரியாத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோடு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட அவர் சிவப்பு நிற அரைக்கால் டவுசர், சிவப்பு நி அரைஞான் கயிறு கட்டியிருந்தார். இடது இடுப்பில் கருப்பு புள்ளி மச்சம், இடது நெற்றியில் காயத்தழும்பு காணப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி மத்திய பஸ் நிலையம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பிணங்கள்
- போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் அருகாமையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதேபோன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டில் அருகாமையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கணேசன் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
- தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் விவசாயி பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள திருமாணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் ராஜலிங்கம் (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதையடுத்து ராஜலிங்கத்தின் மகன் ரத்தினவேல் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ராஜலிங்கம் கிணற்றின் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விராலிமலை அருகே மாயமான இளம்பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்தது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விராலிமலை.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுநகரை சேர்ந்தவர் காஜாமைதீன் இவரது மகள் தஜ்லீன்பானு (வயது24). இவர் தாய் தந்தை இறந்த நிலையில் சகோதர்களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், இவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி சகோதரர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த தஜ்லீன்பானு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு கிணற்றில் தஜ்லீன்பானு பிணமாக கிடந்துள்ளார்.உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஜ்லீன் பானுவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்துள்ளது
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை டவுண் குரூப் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகர் (வயது 39) என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத ஆண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தட்டாங்காடு பகுதியை சேரந்தவர் சுப்பிரமணி (வயது 71). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு ரமேஷ்குமார் (41) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ஈரோடு வைராபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 70 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது இறந்தவர் சுப்பிரமணி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமார் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்டது
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், நசிய னூர், கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32). இவரது மனைவி நித்யா (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் செண்டரிங் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான வெங்கடேஷ் வேலை செய்து கிடைக்கும் பண த்தில் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக நித்யா கணவரைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வெங்கடேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யுள்ளது. அருகில் இருந்த வர்கள் இது குறித்து நித்யாவின் தாயாருக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு வந்த நித்யாவும், வெங்கடேஷின் தாயாரும் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பெட்ரூமில் உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.