search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt burden"

    • சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

    மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.


    சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    • தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பது ஏன்?
    • முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுரை

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலை வரும், முன்னாள் அமைச்ச ருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டய மற்றும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டு தோறும் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர்.

    சுமார் 2 லட்சம் பேர் கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெறுவதில்லை. ஆக மொத்தம் 10 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளியேறி வேலை வாய்ப்புக்காக காத்தி ருக்கின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

    வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதி யையும் நிறை வேற்றாத தி.மு.க. அரசு, ஆண்டுக்கு ரூ.45-50 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து வெற்றி கரமாக நிறைவேற்றி உள்ளது. இப்படியே சென்றால் 5 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியின் முடிவில் மது விற்பனை பல கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் சீரழித்து விடும்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இளைய சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 புதிய கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், 1,102 ஏக்கரில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 248 தொடக்கப் பள்ளிகள் தொடக்கம், 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு, 1079 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு, 52 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டம், மேலும் 13 லட்சம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், பசுமை வீடு திட்டம், ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு விலை யில்லா மிக்ஸி, கிரைண்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டது. ஆனால் தமிழகத்தின் கடன் சுமை உயரவில்லை. ஆனால் தற்போது எந்த திட்டமும் செய்யாமல் தமிழகத்தின் கடன் சுமை இந்தியா விலேயே முதல் இடத்தில் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
    • விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.

    இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    வில்லியனூரில் கணவரின் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார். புதுவையில் தங்கி டெய்லர் வேலை செய்து வந்த போது அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜெயசுதா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

    இதற்கிடையே வில்லியனூர் மெயின்ரோட்டில் ஒரு வாடகை வீட்டின் கீழ் தளத்தில் டெய்லர் கடையும், வீட்டின் மாடியில் மனைவி, குழந்தைகளுடன் ராஜேஷ் வசித்து வந்தார். டெய்லரிங் தொழிலை மேம்படுத்தவும், வீட்டு செலவுக்கும் ராஜேஷ் பலரிடம் பணம் கடன் வாங்கினார். சுமார் 3 லட்சம் வரை கடன்வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த கடனை திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் திண்டாடி வந்தார். அதேவேளையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தனர். இந்த கவலையை மறக்க ராஜேஷ் மதுகுடிக்க தொடங்கினார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கடன் கொடுத்தவர்கள் ராஜேஷ் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர். அப்போது ராஜேஷிடம் அவரது மனைவி ஜெயசுதா தினமும் விட்டின் படிஏறி கடன் கொடுத்தவர்கள் திட்டிவிட்டு செல்வது அவமானமாக உள்ளதே என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ராஜேஷ் மதுகுடிக்க சென்று விட்டார். அன்று இரவு வீட்டுக்கு வராமல் ராஜேஷ் மதுக்கடை அருகிலேயே தூங்கி விட்டார்.

    மறுநாள் ராஜேஷ் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்ததால், மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி அவரை தேடவில்லை.

    இந்த நிலையில் நேற்று சந்தேகம் அடைந்து ராஜேஷ் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் ஜெயசுதா துப்பட்டாவால் தூக்குபோட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயசுதா தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து ஜெயசுதாவின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு திவாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×