என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "declared"
- கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும்.
- சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 23 பஞ்சாயத்துகளையும் ஒரு பேரூராட்சியையும் உள்ளடக்கியதாக உள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள்தொகை உடையது.
தற்போது ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.தென்காசி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு அம்பை தாலுகாவில் இணைந்திருந்தது.
கடையம் ஒன்றியம் ஆனது கடையம், ஆழ்வார்குறிச்சி என இரண்டு பிர்காகளை உள்ளடக்கியதாகும். அடைச்சாணி ஆம்பூர் போன்ற கிராமங்களில் இருந்து தென்காசி தாலுகா அலுவலகம் செல்வதற்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது .இதையடுத்து கடையத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கடையம் வந்த சபாநாயகர் அப்பாவுவிடம் தெற்குகடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் கடையம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட மனுவை சபாநாயகர் அப்பாவு வருவாய் துறை அமைச்சருக்கு, கடையத்தை தாலுகாவாக பிரித்து உதவிட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து சபாநாயகருக்கு, கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை மற்றும் 23 பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது.
இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.
11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். #Plus1Result
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். #Plus2Result #Plus2Exam #TNResults
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.
மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவிகள் 94.6 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனனர். #TNHSCResult #PlusOneResult2018
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பிறந்த தேதி, பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து தேர்ச்சி விவரங்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகம். மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் (98.38 சதவீதம்) இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் (98.26 சதவீதம்) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #SSLCResult #TNResult
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்