search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delusion"

    • தனியார் பஸ் கண்டக்டர் கடத்தியதாக புகார்
    • வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரிக்க லாம்பாக்கம் பெருங்க ளூர் கிராமத்தை சேர்ந்த வர் மாரிமுத்து மகள் வேதஸ்ரீ (வயது 19). இவர் லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் உள்ள உறவினரான மணி கண்டன் (34) என்பவரது வீட்டிற்கு வந்தார். சில நாட்கள் இங்கேய தங்கி ருந்த வேதஸ்ரீ, நேற்று முன்தி னம் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கல்லூரி மாணவியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வேதஸ்ரீயை தேடினர். இதில் வேத ஸ்ரீக்கும் தனியார் பஸ் கண்டக்டருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிந்தது. மேலும், புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் அஜித், தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார் என மணி கண்டனிடம் கூறினர். இதையடுத்து தனது வீட்டில் தங்கியிருந்த மாணவி வேதஸ்ரீயை தனியார் பஸ் கண்டக்டர் கடத்தி சென்று விட்டதாக பண்ருட்டி போலீசாரிடம் மணிகண்டன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி வேதஸ்ரீயை தேடி வருகின்றனர்.

    • இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகள் கோமதி (19). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், கோமதியின் தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார். இதில் பலாப்பட்டு ஊரைச் சார்ந்த பாலமுருகன், தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி தட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகள் ஜெனனி (வயது 24), எம்.எஸ்சி பட்டதாரி. இவர் கடந்த 2-ம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பிதுரை மகளை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் ஜெனனி கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தந்தை தம்பிதுரை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண் ஜெனனி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் ஜெனனியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியாதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார்.
    • செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடபுத்தூரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 43). அதே ஊரில் கேபிள் வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் கேபிள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை, மாயமாகி விட்டார். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே சந்தேகமடைந்த அவரது மனைவி ராதிகா செஞ்சி போலீசில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது.
    • அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திருமலை (வயது 29) இவரது மனைவி தனம் (20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனம் தனது குழந்தையுடன் சம்பவத்தன்று அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைக்கு சென்றார். பின்னர் தனம் வேைல முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ந்த கணவர் திருமலை மனைவி தனத்தை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமலை கொடுத்த புகாரின் பேரில் தயாதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹபிபுனிஷா வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அவுலியா நகர் பனங்காட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் முகமத் மனைவி ஹபிபுனிஷா (வயது 22). வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார். இதுவரை வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    • குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகுமாரின் மகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
    • தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ள்க்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி இரவு சசிகுமார் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகள், மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டில் தனது மகள் காணாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன் செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.
    • கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கனகவள்ளியை தேடினார்.தேடியும் கிடைக்காததால்,போலீஸில் புகார் கொடுத்தார்,

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே சென்னாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் கனகவள்ளி (வயது 22). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி தந்தை சுப்ரமணியுடன்செஞ்சியில் உள்ள அரசு பேங்கிற்கு சென்றனர்.

    இதனையடுத்து கனகவள்ளி கூட்டுரோடு அருகே கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சுப்ரமணி கனகவள்ளியை தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கனகவள்ளி கிடைக்க வில்லை. இது குறித்து சுப்பிரமணி செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார்.
    • மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்

    • அமுதா (வயது 40). இவரது கணவர் இறநது விட்டதால் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
    • வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் பிரியதர்ஷினியை (19) காணவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி அமுதா (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டதால் தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா விவசாய வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள்    ரியதர்ஷினியை (19) காணவில்லை. இவர் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.   அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமுதா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சங்கராபுரம் அருகே பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் குருபாலன் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் கூத்தக்குடி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடையை இவரது மனைவி பேபி ஷாலினி (41) நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி ஷாலினியை தேடி வருகின்றனர்.

    ×