search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharamsala test"

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராலி 79 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டுக்கும் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இப்போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவும், இந்த டெஸ்ட் போட்டியில் மூலம் தங்களது 100-வது டெஸ்டில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
    • இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.

    குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
    • தரம்சாலா டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 700 என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட இரண்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது.

    நேற்று சுப்மன் கில்லை வீழ்த்தியிருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் குல்தீப் யாதவை 30 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

    முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473 ரன்களை எடுத்துள்ளது.
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    தரம்சாலா:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

    ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில்லும் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதமடித்தனர். சர்ப்ராஸ் கான் 56 ரன்னும், படிக்கல் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஜடேஜா, துருவ் ஜுரல் தலா 15 ரன்னும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

    • ரோகித் சர்மா ஸ்கோரில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அடங்கும்.
    • இந்த தொடரில் ரோகித் சர்மாவின் 2-வது சதம் இதுவாகும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, கில் ஆட்டம் தொடங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கில் 64 பந்தில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்றார்.

    அரைசதம் அடித்த பின் கில் ரோகித் சர்மாவுக்கு இணையாக சதத்தை நோக்கி வந்தார். 147 பந்தில் 99 ரன்களை தொட்டார் ரோகித் சர்மார். 56-வது ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அடிக்காமல் மெய்டன் ஆக்கினார் ரோகித் சர்மா.

    ஹார்ட்லி வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து 154 பந்தில் சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்த தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும்.

    ரோகித் சர்மா சதம் விளாசிய நிலையில்,  அடுத்த ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில்லும் சதம் அடித்தார். இவர் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    • ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கில் 64 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

    45 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், கில் 65 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஜாக் கிராலி 71 பந்தில் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
    • குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் ஆனார். பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    ஜாக் கிராலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி பும்ரா- சிராஜ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தது. இதனால் இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக இருக்கும்போது பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஒல்லி போப் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. அவரை 11 ரன்னில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். அத்துடன் முதல் நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 25.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.

    இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் கிராலி பாஸ்பால் ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 64 பந்தில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். தற்போது 71 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    • இந்திய அணியில் பும்ரா, தேவ்தத் படிக்கல் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆகாஷ் தீப், ரஜத் படிதார் நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராபின்சன் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

     இந்திய அணியில் பும்ரா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரஜத் படிதார் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

    ×