என் மலர்
நீங்கள் தேடியது "dictator"
- உக்ரைனில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார்.
- உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை புதுப்பிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
உக்ரைன் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி:
ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்.
அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஜெலன்ஸ்கிக்கு ஏற்படும்.
விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க உள்ளேன். ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
- போதைப்பொருளை ஒழிக்க முதல்வர் சர்வாதிகாரியாக மாற தேவையில்லை என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.
மதுரை
மதுரை கல்லூரி மைதானத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நடந்தது.
கிரிக்கெட் போட்டிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு தேசியக்கொடிகளை பரிசாக வழங்கினார். பின்னர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
75-வது சுதந்திர தின விழாவை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தேசபக்தியுடன் தேச ஒற்றுமையை பாதுகாக்க செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது. ஏனென்றால் தமிழக அரசும், முதல்வரும் காவல்துறை உயர் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு சமமானது. தமிழக போலீசை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மிகவும் திறமை மிக்கவர்கள். அவர்களை சுதந்திரமாக செயல்பட்டால் சட்டம்- ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்பார்கள்.
போதைப் பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என பேசியுள்ளார். போதைப்பொருள் தடுப்பு விஷயத்தில் அதிகாரிகளிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சரியான உத்தரவை, சரியான நேரத்தில் சரியான அதிகாரிகளுக்கு பிறப்பித்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.