என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Diego Maradona"
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
- அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
தோகா:
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார்.
- அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி சமன் செய்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் தொட்டார்.
மரடோனா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினத்துக்கு மறுநாளில் மெஸ்சி இந்த சாதனையை சமன் செய்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.
- அர்ஜென்டினாவின் மாரடோனா 2020-ல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
- தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
புவனேஸ்வர்:
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டிகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி கால்பந்து ரசிகர்களை கண்ணீரில் நனைத்தது.
இதற்கிடையே, கால்பந்து வீரர் மாரடோனாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடோனாவை நினைவு கூரும் வகையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் அவரது உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக். அதில் மாரடோனாவுக்கு அஞ்சலி என்ற வார்த்தையையும் வடித்துள்ளார்.
- மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பியூனர்ஸ் அயர்ஸ்:
பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தற்போது மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் குடும்ப மருத்துவருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், உளவியலாளர் கார்லோஸ் டயஸ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் நான்சி ஃபோர்லினி மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 8 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதை அர்ஜென்டினா நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
இவர்களின் கவனக்குறைவு காரணமாக மரடோனா உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விசாரணை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இவரை மெக்சிகோ இரண்டாவது டிவிஷன் அணியான டோராடோஸ் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டோராடோஸ் தனது சமூக வலைதளத்தில் ‘Welcome Diego’, and ‘Make it a 10’ என்று குறிப்பிட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக கருதப்படும் ஜாம்பவான் டியகோ மரடோனா, செர்ஜியோ ரமோஸை விட அட்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வரும் டியகோ காடின் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் மரடோனாவை விட மெஸ்சிதான் அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரர் என்று ரமோஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரமோஸ் கூறுகையில் ‘‘அர்ஜென்டினாவில், அங்குள்ளவர்களுக்கு கால்பந்து வரலாற்றில் மரடோனாதான் சிறந்த வீரர் என்பது தெரியும். என்னைப் பொறுத்த வரையில் மெஸ்சிதான்.
ஈரான் வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருந்தனர். அதேசமயம் நாங்கள் வேறு வழியில் வெற்றி பெற விரும்பினோம். எங்களால் அனைத்து இடத்திலும் முன்னேற்றம் காண முடியும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
ஸ்பெயின் அணி கடைசி லீக்கில் மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.
இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,
‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார். #DiegoMarodona #Argentina
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்