search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Distance"

    • சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில், உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

    • Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.

    • வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
    • அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.
    • ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

    • டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது,
    • டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதையும் மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.பண்ருட்டி நகரப்பகுதியில் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவற்றை அகற்ற நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவிட்டார்அதன்பேரில் நகரமைப்பு அதிகாரி என்ஜினீயர் மணி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பேனர்கள் அகற்றும் பணி மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

    ண்ணா சிலை அருகில்,பஸ் நிலையம், 4 முனைசந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை,காந்தி ரோடு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 35 டிஜிட்டல் பேனர்களும், 4 விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    கடலூர்:

    புவனகிரி-விருத்தாசலம் சாலை, புவனகிரி- கடலூர் சாலை மற்றும் ஒரு வழி பாதையான சின்ன தேவாங்கர் தெரு ஆகிய இடங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிக அளவு ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுஇது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

    இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்த மான இடம் வரை அம்புக்குறி பெயிண்டால் போடப்பட்டதுஇதனை அகற்றிக் கொள்ள சுமார் 15 நாட்க ளுக்கு முன்பாக அனைத்து கடைக்காரரிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைக்கா ரர்கள் முன்பக்கம் இருந்த கீத்து கொட்டகை மற்றும் தகர சீட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி வைத்த செங்கல் சுவர் மற்றும் காங்கிரட் தளம் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றவில்லை.இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதி காரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதனால் சாலை அதிக அளவில் பொது மக்கள் வாகன ஓட்டிகள் செல்வதற்கு வசதி யாக உள்ளது.


    ஆனால் தார் சாலை ஒட்டியுள்ள மின்கம்பங்களை ஆக்கிரம்புகள் அகற்றிய இடத்தின் ஓரமாக பொருத்தி னால் தார் சாலை மிகவும் அகலமாக இருக்கும். போக்கு வரத்திற்கும் இடை யூறு இல்லாமல் இருக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்ற னர்இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக மின்கம்பங்களை அகற்றி விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 3 நாட்களில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம்.
    • சைக்கிளில் சென்று பார்க்கும் போது பாரம்பரிய சின்னங்களுடன் நமக்குள்ள ஈர்ப்பு அதிகமாகும்.

    தஞ்சாவூர்:

    சென்னையை சேர்ந்த சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய இடங்களில் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி 11-வது ஆண்டாக இன்று தஞ்சையில் இருந்து அந்த குழுவை சேர்ந்த 60 பேர் தங்களது பயணத்தை தொடங்கினர். இந்த சைக்கிள் பயணத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பயணமானது தஞ்சையில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் வீராணம் நோக்கி சென்றது.

    இதுகுறித்து சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்த ராமானுஜம் கூறும்போது:-

    நாங்கள் ஆண்டு தோறும் பாரம்பரிய சின்னங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு தஞ்சையில் எங்களது பயணத்தை தொடங்கி உள்ளோம். 3 நாட்களில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம்.

    இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் டிரேயில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் எங்களது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் அமைந்துள்ளது. முதல் நாளானஇன்று தஞ்சையில் இருந்து வீரா ணத்துக்கு செல்கிறோம். அங்கு பொன்னியின் செல்வன் தடம் பதித்த இடங்களை பார்த்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறோம்.

    கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பாரம்பரிய சின்னங்களை பார்ப்பதை விட சைக்கிளில் சென்று பார்க்கும் போது பாரம்பரிய சின்னங்களுடன் நமக்குள்ள ஈர்ப்பு அதிகமாகும். சைக்கிளில் செல்லும் போது சுற்றுச் சூழலுக்கும் கேடு கிடையாது. உடலுக்கும் ஆரோக்கியம்.

    முதல் நாளான இன்று வீராணத்துக்கு செல்கிறோம். நாளை 2-ம் நாளாக பயணமாக நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு செல்ல உள்ளோம். 3-ம் நாள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, திங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்கிறோம். இந்த மூன்று நாள் பயணத்தில் பல்வேறு பாரம்பரிய இடங்களை பார்த்து மற்றவர்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

    சோழர்கள் வாழ்ந்த இடங்கள் குறித்தும் தெரியப்படுத்துகிறோம். எங்களது சுற்று பயணத்துக்கு தமிழ்நாடு சுற்று லாத்துறை மிகவும் உறுது ணையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் மானியக்கோரிக்கையில் அறிவித்திருந்தார்.
    • 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், 9-ம் வகுப்பிற்கு 8 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை விதிகளின்படி புதிய பள்ளிகள் துவங்கவும், தரமும் உயர்த்தப்படுகின்றன.கடந்த ஆட்சியில் 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு 35 பள்ளிகள் உயர்த்தப்பட்டன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 2021-22ம் கல்வியாண்டில் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் மானியக்கோரிக்கையில் அறிவித்திருந்தார். இருப்பினும் கடந்தாண்டு ஒரு நடுநிலைப்பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பழையகோட்டைபுதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவர்கள் உயர்கல்விக்காக8 கி.மீ., வரை பயணிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.இப்பள்ளியில், வெங்கரையாம்பாளையம், நல்லம்மாள்புரம், கஸ்பா பழையகோட்டை, கண்ணியன்கிணறு, இச்சிக்காட்டுவலசு, சேமலைவலசு ஆகிய ஊர்களை சேர்ந்த 172 மாணவர்கள் படிக்கின்றனர். காங்கயம் வட்டத்தில் கிராமப்புற பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்டதுஇப்பள்ளி.

    இங்கு 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், 9-ம் வகுப்பிற்கு 8 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் அரசு பஸ் வசதியோ, தனியார் பஸ் வசதியோ இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புகின்றனர்.மாணவிகள் நீண்ட தூரம் சைக்கிளில் செல்வது பாதுகாப்பில்லாததால் நாளொன்றுக்கு 100 ரூபாய் செலவழித்து ஆட்டோவில் அனுப்புகின்றனர்.

    பொருளாதார சிக்கல் ஏற்படுவதாக சில பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கே அனுப்புவதில்லை.அப்பகுதி ஊராட்சி உறுப்பினர் ரஞ்சிதம், பழனியம்மாள் கூறுகையில், பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்க உயர்த்த பொதுமக்கள் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து அரசுக்கு செலுத்தி விண்ணப்பம் அனுப்பி 2ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பழையகோட்டைபுதூர் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கருணை காட்ட வேண்டும் என்றார்.

    ×