என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Divisions"
- மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்
மதுரை
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவு பணி, பாதாளசாக்கடை, ஓட்டுநர், பம்பிங் ஸ்டேசன், தெருவிளக்கு, பிட்டர் கூலி, பார்க் மஸ்தூர், கம்ப்யூட்டர், எழுத்தர், அலுவலக பணியாளர், துப்புரவு மேற்பார்வையாளர், பில் கலெக்டர் உள்பட சி மற்றும் டி பிரிவு பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய வேண்டும், கிராமப் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும்.
ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
- மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். மாணவர்களுக்கான இப் போட்டியில் 27 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, உடற்கல்வி ஆய்வாளர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.