என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Djokovic"

    • அரையிறுதியில் ஜோகோவிச் - டிமித்ரோவ், ஃப்ரிட்ஸ் - மென்சிக் மோதுகின்றனர்.
    • இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

    இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000 டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வயதான வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருக்கிறார்.

    தற்போது ஜோகோவிச் வயது 37 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகிறது. முன்னதாக ரோஜர் ஃபெடரர் தனது 37 வயது ஏழு மாதங்கள் இருக்கும் போது இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி தொடர்களின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வயதான வீரர் என்ற சாதனையாக இருந்தது. 

    • ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
    • ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    துரின்:

    உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

    குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.

    இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    • நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.

    • இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
    • இதில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,

    தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.

    முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார். சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்பெலசை எளிதில் வென்றார்.
    • இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பெரெட்னியை வீழ்த்தினார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்பெலசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 , 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்தார்.
    • ஜோகோவிச், முர்ரே ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார். இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பல்கேரியா வீரரை வென்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ரஷியாவின் ஆண்டி ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4 - 6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்தவர் ஸ்டெபி கிராப்.
    • இவரது சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும். 2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்குத் தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஒட்டுமொத்தத்தில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன் 22 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபிகிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஜோகோவிச் தகர்த்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜோகோவிச் வெளியிட்ட வீடியோ பதிவில், அதிக வாரங்கள் முதலிடம் வகிக்கும் சாதனை வரிசையில் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டெபி கிராப்பை முந்தியுள்ளேன். இச்சாதனை உண்மையிலேயே மிக மிக பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்,

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 2ம் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்,

    • செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
    • இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

    இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×