search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK-BJP"

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
    • கோ பேக் மோடி இல்லை நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, " GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், " நீங்க GET OUT MODI என ட்வீட் போடுங்கள்.. நாளை காலை 6 மணிக்கு நான் GET OUT STALIN என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்.

    நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்றார்.

    முன்னதாக, கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

    அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.

    வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்றார்.

    • பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சிதம்பர நகரில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செய லாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கொள்கை, சுய மரியாதை கொண்டு தி.மு.க. பகுத்தறிவை வளர்த்தது. பெரியார், அண்ணா, கலைஞர் என 50 ஆண்டு நட்பு கருத்துகளை பரிமாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழன் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாடுபட்டவர். இது போன்ற வரலாறுகளை எல்லாம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் தனது கட்சிக்கு கொள்கை என்ன என்றே தெரியாமல் பேசி வருகின்றனர்.

    தனியாருக்கு விற்பனை

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்லத் தயாரா? வேலை வாய்ப்பு இல்லை, உரிமைகள் பறிப்பு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை, இது தான் உங்கள் சாதனை.

    மதம், ஜாதி போன்ற வற்றை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அது நடக்காது.

    தி.மு.க. ஆட்சியில் கல்வி, வேலை வாய்ப்பு, மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு ரூ.500 உயர்வு தொகை, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 பாராளுமன்ற தொகுதி களிலும் வெற்றி பெறு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர்கள் ராஜ சேகர், இருதயராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்டஅவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக் குழு உறுப்பி னர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, பிரதீப், ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சின்னத்துரை, ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×