என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMMK"
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
- கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மத்திய மாவட்டம் சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன பொதுக்கூட்டம் த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., பத்திரிகையாளர் செந்தில் வேல், திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் இனப்படு கொலை, இலங்கை அரசால் தமிழக மீனவர்க ளின் தொடர் கைது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கோபி, ஜூன். 27-
ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்