என் மலர்
நீங்கள் தேடியது "doctorate"
- தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
- தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.
தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.
இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.
இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது.
- பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது.
கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் எஸ்.அப்துல் சமதுவின் சமூக சேவையை பாராட்டி உலக செம்மொழி தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை நீதிபதிகள் என்.எப்.ஜே. பொன்னுதுரை, என்.வைத்யநாதன், வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்வரன்சிங் ஆகியோர் வழங்கினர்.
இதையொட்டி அப்துல் சமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் வால் டாக்ஸ் ரோடு ரமேஷ், ஆர்.கே. நகர் சம்சு, ராயபுரம் ஏ.எஸ்.டி.மணி, பி.தாஸ், கே.கிருஷ்ண மூர்த்தி, டி.தன பால், சுதாகர், ராயபுரம் மாரி ஆகியோர் சென்றிருந்தனர். #Congress
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டார்.
1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து இவர் ஆராய்ச்சி செய்தார்.
மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை என்கிற தலைப்பில் மேற்கொண்ட அவரது ஆராய்ச்சிக்கான பொது வாய்மொழி தேர்வு (வைவா) நேற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் இந்த ஆய்வை திருமாவளவன் மேற்கொண்டார்.
வாய்மொழி தேர்வில் பேராசிரியர் சொக்கலிங்கமும், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் பாஜ்பாயும் கலந்து கொண்டனர்.
புறத்தேர்வராக பங்கேற்ற பாஜ்பாய் ஆராய்ச்சி குறித்து பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு திருமாவளவன் விடையளித்தார்.
பின்னர் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்க அவர் பரிந்துரை செய்தார். அதன்படி நேற்று அவருக்கு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பாஸ்கரன், டாக்டர் பட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது குற்றவியல் துறை தலைவர் பேராசிரியர்கள் பியூலாசேகர், மாதவ சோம சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டார்.
முனைவர் பட்டம் பெற்றது பற்றி திருமாவளவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் மதம் மாற்றம் தொடர்பாக நாளேடுகளில் பார்த்தேன். சுமார் 200 குடும்பத்தினர் ஒரே நேரத்தில் மதம் மாறினார்கள். அது அப்போது பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது.
அப்போது பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் யோகேந்திரா மந்த்லானா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் போன்றவர்கள் அக்கிராமத்திற்கு நேரிடையாக சென்றனர்.
நீண்ட காலமாக இதன் பின்னணியை முழுமையாக ஆராய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
ஆகவே முன்னாள் துணை வேந்தர் சொக்கலிங்கத்தின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். அண்மையில்தான் அந்த அறிக்கையை சமர்பித்தேன். அதற்கான ‘வைவா’ தேர்வு நேற்று நடந்தது. அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.
ஆராய்ச்சியின் அறிக்கையினை ஏற்றுக் கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. எனது ஆராய்ச்சியில் 2 செய்திகளை உறுதிப்படுத்தி இருக்கிறேன்.
இந்து மதம் மாற்றம் யாருடைய தூண்டுதலிலும் நடைபெறவில்லை. சாதி கொடுமையில் இருந்தும் அரசின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதற்காக மக்களே மேற்கொண்ட முடிவு என்பதனையும் அவர்கள் இஸ்லாமியர்களாக மாறியதால் அவர்களது சமூக மதிப்பு, பொருளாளதார வளர்ச்சி தற்போது மேம்பட்டு உள்ளது என்பதையும் எனது ஆராய்ச்சி மூலம் நிறுவி இருக்கிறேன்.
என்னுடைய கல்வித் தகுதிக்காக இந்த டாக்டர் பட்டத்தை நான் பெறவில்லை. இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் சமூக தகுதி உயர்ந்து இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஈடுபட்டேன். இந்த ஆராய்ச்சியில் எனக்கு மன நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், பாரதீய நபிக்கிய வித்யுட் நிகாம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கல்லோல் ராய் ஆகியோருக்கு தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நடிகர் பாண்டியராஜன்
தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.