என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinkingwater"

    • கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
    • தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    திருச்சி மாவட்டத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்துடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

    இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதான குழாயில் கசிவு சரி செய்யும் பணி நடைபெறுகிறது
    • எந்தெந்தெந்த ஏரியா விவரங்கள்

    திருச்சி,

    திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டி களுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகி றது. இந்த நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக, சர்க்கார் பாளையம் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள 900 எம்.எம்.விட்டமுள்ள குழாயில், நீர் கசிவு ஏற்பட்டு சாலையில் வீணாக சென்றது. அதனை சரிசெய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது.எனவே , மாநகராட்சி மண்டலம் -2க்கு உட்பட்ட விறகுப்பேட்டை புதியது. சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்குஉக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, மேலகல்கண்டார்கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி, மேலகல்கண்டார்கோட்டை நூலகம், பொன்னேரி புரம்புதியது, பொன்னேரி புரம்பழையது, பொன்ம லைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம் -4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், எல்ஐசி புதியது, எல்ஐசி சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் ஈ.பி. காலனி, வி.என்.நகர் புதியது, வி.என்.நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர்ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நாளை(23ந்தேதி) ஒருநாள் குடிநீர் விநியோ கம் நடைபெறாது.நாளை மறுநாள் (24ந்தேதி) அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    • கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
    • பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

    எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×