search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drought District"

    • நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயனிடம், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடை யப்பன் நிர்வாகிகளுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.

    ஆனால் கடந்த முறை வடகிழக்கு பருவமழை சாியாக பெய்யாததால் அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் சில இடங்களில் இருக்கின்ற தண்ணீரை வைத்து விவசாயிகள் நெற்பயிா்கள் நடவு செய்துள்ளனா். கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் சாியாக பெய்யாத காரணத்தால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. இதனால் நெற்பயிா்களுக்கு தண்ணீா் இல்லாத நிலை உருவாகி நெற்பயிா்கள் அழிந்துள்ளது. மேலும் பல இடங்களில் நடப்பட்டிருந்த வாழைகளும் கருகி உள்ளது.

    நெல்லை மாவட்ட மக்கள் கையில் இருந்த பணத்தை விவசாயத்தில் இழந்து வறுமையின் கோரப்பிடியில் உள்ளாா்கள். மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரும்பான்மையான விவசாயிகள் வேறு தொழில் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனா். இதனால் கிராமங்களில் வாழும் விவசாயிகள், விவசாயத்தை நம்பியுள்ள கூலி விவசாயிகள், விவசாயத்தை சாா்ந்து தொழில் செய்வோா் அனைவரும் இந்த வறட்சியினால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீா் மிகவும் கீழே சென்று விட்டதாலும், ஆறுகளில் போதிய அளவு தண்ணீா் வராததாலும் குடிநீா்

    சாிவர பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ள த்தோடு கருணை கூா்ந்து நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு உாிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதமாக எழுதி ஆவுடையப்பன் வழங்கினார். அப்போது தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
    • ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 10 கிலோ ரேஷன் அரிசி வழங்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அசோக், நேர்முக உதவியாளர் வேளாண்மை கிருஷ்ணகுமார், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்ப டையார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

    விவசாய தொழிலா ளர்கள் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வீதத்தில் ரேஷன் அரிசி வழங்கப்படு கிறது. அதனை 10 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார்.

    கொப்பரை தேங்காய்

    தொடர்ந்து பேசிய மற்றொரு விவசாயி, மானூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு விரைவில் ராமையன்பட்டியை முதன்மை கொள்முதல் நிலையமாக கொண்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடி க்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    குளங்களில் மண் அள்ளு வது வியாபாரமாக மாற்றி வருகின்றனர் என்று வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.

    அதற்கு பதில் அளித்த கலெக்டர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் வழங்க வேண்டும். அதனை மீறி ஏதேனும் தவறு நடந்தால் ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வர்கள் ஜெயிலில் அடைக் கப்படுவார்கள் என்று கூறினார்.

    இந்த காரசார விவாதத்தின் போது எழுந்த விவசாயி ஒருவர், வேளாண்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பணி களை சரியாக செய்வது இல்லை. 4 அதிகாரிகளை 'சஸ்பெண்டு' செய்தால் தான் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்று ஆதங்க த்துடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் கூட்டத்தில் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 1.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஜூலை மாதத்தில் இது வரையில் 21.60 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. வழக்கமான மழையளவை விட இது 18.18 சதவிகிதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி குறைவு குறித்த விரிவான விபரம் அரசுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடி யன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களின் கீழ் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு களான 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங் களுக்கு கார் பருவ சாகு படிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.

    இதுவரையில் 106.64 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 150 மெட்ரிக் டன் நெல் விதை கள் வேளாண்மை விரி வாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 1085 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடியும், 293 ஹெக்டர் பரப்பில் கார் நெல் சாகுபடியும் செய்யப் பட்டுள்ளது. இதைத்தவிர சோளம், கம்பு ஆகிய சிறு தானியம் 208 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

    ஜூன் 2023-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட த்தில் மொத்தம் 131 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இவற்றுள் வேளா ண்மை சார்ந்த மனுக்கள் 76, வேளாண்மை சாராத மனுக்கள் 55 பெறப் பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
    • இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

    வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

    ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×