என் மலர்
நீங்கள் தேடியது "Ducati"
- டுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இது டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மாடலின் ஸ்போர்ட் அம்சங்கள் நிறைந்த புது வேரியண்ட் ஆகும்.
டுகாட்டி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய மல்டிஸ்டிராடா V4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 31 லட்சத்து 48 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பைக்ஸ் பீக் வேரியண்ட் மல்டிஸ்டிராடா V4 மாடலின் ஸ்போர்ட் அம்சங்கள் நிறைந்த வேரியண்ட் ஆகும்.
ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 பைக்ஸ் பீக் மாடல் அதன் ஸ்டாண்டர்டு மோட்டார்சைக்கிள் போன்றே காட்சியளிக்கிறது. இதில் ட்வின் பாட் ஹெட்லைட், செமி ஃபேரிங், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பைக்ஸ் பீக் லிவரி, சிறிய விண்ட்ஸ்கிரீன், 17 இன்ச் வீல், சிங்கில் சைடு ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹார்டுவேரை பொருத்தவரை 48 மில்லிமீட்டர் ஒலின்ஸ் முன்புற போர்க்குகள், பின்புறம் ஒலின்ஸ் TTX36 மோனோ ஷாக் மற்றும் ஒலின்ஸ் ஸ்மார்ட் EC 2.0 எலெக்டிரானிக் அட்ஜஸ்ட்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 330 மில்லிமீட்டர் செமி ஃபுளோட்டிங் டிஸ்க், முன்புறத்தில் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் நான்கு பிஸ்டன் 2 பேட் கேலிப்பர்கள், பின்புறம் சிங்கில் 265 மில்லிமீட்டர் ரோட்டார் மற்றும் பிரெம்போ ட்வின் பிஸ்டன் புளோட்டிங் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 6.5 இன்ச் TFT டிஸ்ப்ளே, அட்பாடிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், டேடைம் ரன்னிங் லைட், கார்னெரிங் லைட், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் 1158சிசி, 90-டிகிரி V4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 167.6 ஹெச்பி பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா V4 S மாடலை அறிமுகம் செய்தது.
- 2022 V4 S மாடல் கணிசமான அப்டேட்களை பெற்று புது அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2022 மல்டிஸ்டிராடா V4 S அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடல் ஐஸ்பெர்க் வைட் என புதிய நிறத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 26 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலின் டாப் எண்ட் S வெர்ஷனை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் பிரீலோட் செட்டப், ரிவைஸ்டு இன்போடெயின்மெண்ட் செட்டப், லோயர்டு சஸ்பென்ஷன் கிட் மற்றும் அலுமினியம் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 2022 மல்டிஸ்டிராடா V4 S மாடலிலும் 1158சிசி, கிரான்டூரிஸ்மோ V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 167.6 ஹெச்பி பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் இவோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வயர்-ஸ்போக் வீல்கள், 6.5 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், நேவிகேஷன், கால்ஸ், மியூசிக் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 30 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியூரோ என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கார்னெரிங் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2022 டுகாட்டி பனிகேல் V4 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 26 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டுகாட்டி பைக்- V4, V4S மற்றும் V4 SP 2 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
பனிகேல் V4 ரூ. 26 லட்சத்து 49 ஆயிரம்
பனிகேல் V4 S ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம்
பனிகேல் V4 SP2 ரூ. 40 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய மாடலில் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ், எர்கோனோமிக்ஸ், சேசிஸ், என்ஜின் மற்றும் எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. 2022 பனிகேல் V4 மாடலில் ட்வின் பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், அண்டர்பெல்லி எக்சாஸ்ட் மற்றும் சிங்கில் சைடு ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் முன்பு இருந்ததை விட மெல்லியதாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முன்பை விட மெல்லியதாக மாறி இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது டவுன்போர்ஸ் 39 கிலோவாக இருக்கும் என டுகாட்டி தெரிவித்துள்ளது.

புதிய டுகாட்டி பனிகேல் V4 மாடலில் 1,103 சிசி, வி4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, டெஸ்மோசிடிசி ஸ்டிராடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 212.5 ஹெச்பி பவர், 123.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் போஷ் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், பவர் லான்ச், பை டேரக்ஷனல் குயிக் ஷிப்டர் மற்றும் ஆட்டோ டயர் கேலிபரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் கவசாகி ZX-10R மற்றும் பிஎம்டபிள்யூ S1000RR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்பைட்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட்பைட்டர் V4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்டிரீட்பைட்டர் V2 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 17 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டுகாட்டி ரெட் என ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட்பைட்டர் V4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் V வடிவ எல்இடி டிஆர்எல், மஸ்குலர் பியூவல் டேன்க், சில்வர் நிற ரேடியேட்டர் ஷிரவுட்கள், ஸ்போர்டி என்ஜின் கௌல், ஸ்டெப்-அப் சேடில், சிங்கில்-சைடு ஸ்விங் ஆர்ம் மற்றும் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், 4.3 இன்ச் TFT டேஷ்போர்டு உள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் IMU இனெர்ஷியல் பிளாட்பார்ம், மூன்று ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்ஷனல் குயிக் ஷிப்டர் மற்றும் என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V2 மாடலில் 955சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.9 ஹெச்பி பவர், 101.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்பைட்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் சக்திவாய்ந்த ஸ்டிரீட்பைட்டர் V4 SP ஹைப்பர் நேக்கட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களை விட முறையே ரூ. 14 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சத்து 76 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் மொத்த எடை 196 கிலோ ஆகும். இந்த பைக்கின் ஸ்டாப்பிங் பவர் பிரெம்போ ஸ்டைல்மா ஆர் கேலிப்பர்கள் மூலம் பெறுகிறது. இதன் சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் NIX-30 முன்புற ஃபோர்க்குகள், TTX36 ரியர் ஷாக் அப்சார்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்டீரிங் டேம்ப்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்மார்ட் EC 2.0 சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 1103சிசி டெஸ்மோசிடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105 ஹெச்.பி. பவர், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தையில் புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு நாடு முழுக்க டுகாட்டி விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும். வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
- டுகாட்டி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புது ஸ்கிராம்ப்ளர் பைக்கை அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்கிராம்ப்ளர் மாடல் டூயல் பெயிண்ட் நிறங்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என அழைக்கப்படுகிறது. புது மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களின் வரிசையில் இணைந்துள்ளது. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
ஏற்கனவே ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க், ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிப்ட், ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலும் இந்த வரிசையில் இணைந்து இருக்கிறது.

டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் எண்ட்ரி லெவல் மாடல் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க். இந்த மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். ஸ்கிராம்ப்ளர் சீரிசில் விலை உயர்ந்த, டாப் எண்ட் மாடல் என்ற பெருமையை புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் பெற்று இருக்கிறது.
புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் எடை 180 கிலோ ஆகும். இதில் 803சிசி, ஏர் கூல்டு, இரு வால்வுகள் கொண்ட எல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- டுகாட்டி நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் வெளியாகியுள்ளது. புது மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களின் வரிசையில் இணைகிறது.
புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. டீசரின் படி மோட்டார்சைக்கிளில் ஓரமாக பொருத்தப்பட்டு இருக்கும் சிங்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் பாட் மற்றும் பீக் ஸ்டைல் மட்கார்டு உள்ளிட்டவைகளை கொண்டு தான் இந்த மாடல் ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இந்திய சந்தையில் புது மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கு சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் ஸ்போர்ட் ப்ரோ, டார்க் ப்ரோ மற்றும் டிரிபியுட் ப்ரோ மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், அரன்பன் மோட்டார்ட் மாடலில் 803சிசி யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையை போன்றே இந்திய சந்தையிலும் இதே யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.




