search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dysentery"

    • நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
    • வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    பொதுவாக உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லது. தண்ணீரை மேல்நோக்கிய நிலையில் குடிக்காமல், வாய் வைத்து அருந்த வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    உணவுமுறை:

    * சுண்டைவற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு ஒரு கிராம் இவைகளை வறுத்து பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மதிய உணவின் போது இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் நெய்விட்டுப்பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத்தொல்லைகள் சரியாகும்.

    * சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சமஅளவில் எடுத்து பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல் தீரும்.

    * சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டு தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்பு சேர்த்து மோர் விட்டு பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

    * மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பிரண்டை வடகம், கண்டை வற்றல் சூரணம், ஏலாதி சூரணம், அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம். குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன.

    • விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
    • அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

    விழுப்புரம்:

    மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கந்தாடு ஊராட்சி இப்பகுதியில் உள்ள காணி மேடு கந்தன் பாளையம் மண்டகப்பட்டு குரும்பூரம் முதலியார் பேட்டை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    அப்பகுதியில் அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது விவசாயம் பாதிக்க ப்பட்டால் கால்நடை கள் வளர்ப்ப தின் மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதுபோல் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது.

    இதன் காரணமாக தந்தாடு ஊராட்சியில் உள்ள காணி மேடு மண்டகப்பட்டு குறும்புறம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் மர்ம நோயால் பாதிக்க ப்பட்டுள்ளது. இதுபோல் பாதி ப்பட்டுள்ள கா ல்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய கால்நடை மருத்துவர்களும் இங்கு இல்லை. இதனால் மர்ம நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகிறது. இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மண்டகப்பட்டு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் கால்ந டைகளுக்கும் சிகிச்சை அளி க்க மா வட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.

    ×