என் மலர்
நீங்கள் தேடியது "earth"
- பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும்.
- நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது. இந்த சிறு கோள் ஆனது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.
இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும். ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும்.
மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் என்றும் என்றும் புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக ரியாக்ட் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிகிண்டனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது, குறிப்பிடத்தக்கது.
- பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது.
- சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களை குறிப்பாக சிறுகோள்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதிலும், பகுப்பாய்வு செய்வதிலும் முன்னணியில் உள்ளது. தற்போது, மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி '2024-ஓன்' என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும்.
இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'விண்வெளியில் '2024 ஓஎன்' சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி இன்று (அதாவது நேற்று) பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி மீண்டும் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.
இந்தமுறை பூமிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமலும், ஆபத்துகள் இல்லாமலும் சிறுகோள் கடந்து சென்றது.
விண்வெளியில் சமீப காலமாக பூமிக்கு அருகில் வரும் சிறுகோள் (விண்கற்கள்), அதுபற்றி கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள தொலைநோக்கிகளை பயன்படுத்தி இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடக்கிறது.
அதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.
- பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.
பூமிக்கு இன்று முதல் புதிய மற்றும் தற்காலிக 'மினி மூன்' இன்றிரவு முதல் நிலவில் தோன்றுகிறது. "2024 பிடி5" என அழைக்கப்படும் புதிய மினி மூன் சிறிய விண்கல் ஆகும். இது பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.
இந்த மினி மூன் சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறை எனலாம். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்புகிறது. அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கிறது. ஆனால் இந்த மினி நிலவு, வழக்கமான நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.
மினி மூன்-ஐ வெறும் கண்களால் பார்க்க முடியாது. இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இது வானில் தோன்றுகிறது. இன்று நள்ளிரவு தோன்றும் மினி நிலவை வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வரை கண்டுகளிக்கலாம்.
- கடந்த மார்ச் மாதம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- 8 மாதத்துக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த 2 மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். அங்கு போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி அந்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்தது.
தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.
மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. அதன்பின், விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
- 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.
- விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை.
பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:-
பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது என்பதை நாசா கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி முதல் விண்கல் பூமியை கடந்து செல்கிறது. 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 லட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம். 2-வது விண்கல் 2007 யூடி3.பூமியிலிருந்து 42 லட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் 3-வது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது. பூமியிலிருந்து சுமார் 30 லட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது. இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும். மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல்1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. எல்லாம் தரைமட்டமாகிவிடும். தவிர, எரிமலை வெடிப்பு, சுனாமி ஏற்படும்.
ஆனால் இது எதுவும் தற்போது நடக்காது என்று நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை. இதனால் பூமி பக்கம் திரும்பும் இல்லை என்றனர்.
- விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கினர்.
- இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
- தொழில்நுட்பக் கோளாறால் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.
பெங்களூரு:
இரு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன் 24 ஆய்வுக்கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த இரு விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இதையடுத்து, இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணி ஜனவரி 9-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும்.
- ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டம் இணைந்து உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஓசோன் இல்லாமல் பூமியில் உயிர் வாழ முடியாது, ஓசோன் பூமியை காக்கும் காவலன், இவற்றின் முக்கிய பணி சூரிய ஒளியிலிருந்து வரும் அதிக வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுத்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கிறது.
ஓசோன் படலம் அழிந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். மேலும் நீர் நிலைகள் வறண்டு போய்விடும்.வெப்பம் அதிகமானால் நம்முடைய தோள் சுருங்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் சீக்கிரமாக சீர்கெட்டுவிடும். பல நோய்கள் உயிரனங்களை தாக்கும். உணவு சங்கிலி அறுபட்டு விடும். ஆக்ஸிஜன் அளவு முற்றிலும் குறையத் தொடங்கும், ஓசோன் என்பது உலகிற்கும்,உயிரினங்களுக்கும் உற்ற தோழன். தலைமறைவாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக நம்மை காக்கிறது ஓசோன்.
பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றார். தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையா பேசுகையில், மாணவர்கள் ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி குழுக்களாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் அருள்குமார், பூபாலன், ரமேஷ், சர்நித்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஓசோன் விழிப்புணர்வு நடனம் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளும், பொது மக்களும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களும் இணைந்து ஓசோன் படலத்தை காக்க பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முரளி, பாரதிராஜா, சத்தியன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது.
- கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.
நியூயார்க்:
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது.
இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் தேதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது.
அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வரும் நாட்களில் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும், அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்ட்ரஸ்டிங் என்ஜினீயரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது? என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. பூமியின் மையப்பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் சுழலும் வேகம் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் விகிதத்துக்கும், கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம். இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலை தொடர்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஏனெனில் கடிகாரம் 23:59:59-ல் இருந்து 23:59:60 வந்த பின்னர் தான் 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாக சுற்றுவதால் லீப் வினாடிகள் ஏற்படும் பட்சத்தில் அது தொலை தொடர்பு புரோகிராம்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

நியூயார்க்:
அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது.
இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை.
தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #NewPlanet
அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.

அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரே இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக கவிதை எழுதும் கவிஞர்களுக்கு முதலில் எளிமையாக கிடைக்கும் உவமையாக நிலவு இருந்துவரும் நிலையில், இனி ஒன்றுக்கு மூன்று நிலவுகள் இருப்பதால் உவமைக்கு பஞ்சம் இல்லை. #Earth #AdditionalMoons