search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Easter festival"

    • வருகிற 14-ந்தேதி இடைக்காட்டூர் திருஇருதய ஆலயத்தில் பாஸ்கா திருவிழா தொடங்குகிறது.
    • விழாவில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலம் 140 ஆண்டுகள் புகழ்மிக்க ஆலயம் ஆகும். இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி சிறப்பு வெள்ளியாக கருதபட்டு சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டு பிராத்தனை நடை பெறும்.

    இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இடைக்காட்டூர் திருஇருதயஆண்டவர் 140வருடத்திற்கும் மேலாக இங்கு ஏப்ரல் மாதம் 2நாட்கள் பாஸ்கா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான பாஸ்கா திருவிழா வருகிற 14, 15தேதிகளில் இரவு இடைக்காட்டூரில் உள்ள கிறிஸ்து அரங்கில் நடைபெற உள்ளது.

    விழாவில் டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்பில் லேசர் திரைகளில் இயேசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளை கலைஞர்கள் தத்ரூபமான முறையில் நடத்தப்படும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நடித்து காண்பித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். 2நாட்கள் விடிய விடிய நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் இடைக்காட்டூர் வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர் செய்து வருகின்றனர்.

    • ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    திருவாரூர்:

    ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது.

    இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
    • அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

    அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது
    • தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    உலகில் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி சரத்குமார், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #easterday

    சென்னை:

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது.

    இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.

    சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இறைவன் இயேசு கிறிஸ்து அனைவரது உள்ளங்களிலும் புதிய நம்பிக்கையையும், ஒளியையும் ஊட்டுவாராக.

    அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேர முண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடருவதற்கான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வாக்கு எந்திரங்களில் எழுதியிருக்கிறார்கள்.

    தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும்.

    மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.

    ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு பிரான் ஒரு சராசரி மனிதன் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மேலான துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தியாக சுடராக சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மீண்டும் அவதரித்து வந்த நாளை, ஈஸ்டர் தினமாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

    கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ:-

    இந்த உலகத்திற்கு தூய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய ஏசுபிரான் உயிர்த்த பெரு நாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குதூகலத் துடனும், வளமுடனும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதுடன் உன்னை நீ அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய் என்ற ஏசுவின் பொன்மொழிகளை கடை பிடித்து வாழ்வதுடன் நம் வாழ்வில் தியாகம், கருணை, சமத்துவம், சகோத ரத்துவம் ஆகிய நல்பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday

    ×