என் மலர்
நீங்கள் தேடியது "Edappadi pazhanisamy"
- எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
- புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- திமுகவின் காங்கிரஸ் எஜமான விசுவாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- எத்தனை நாடகங்களை பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் அரங்கேற்றப் போகிறார்களோ?
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 19ம் தேதி முதல் அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் அவர்கள் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, 21.12.2010-ல் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது.
2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு
தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவர்களின் மனைவி, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு
தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும்
இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது', 'இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டி அளித்தார்.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு நீட் நுழைவுத் தேர்வு விலக்கு பற்றி அனைத்து சட்ட அம்சங்களையும் ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம்.
உண்மை இவ்வாறிருக்க, 2021-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தலின்போது மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழக மக்களுக்கு நீட் நுழைவு தேர்வு குறித்து பொய் வாக்குறுதி அளித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும், அதை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள், பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
'நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் இரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை 2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரியும் என்று மு.க. ஸ்டாலின் 10.1.2025 அன்று தமிழ்நாடு
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு அளிக்க நடத்தப்பட்ட நாடகத்தின் முதற்கட்டமாக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாம் கட்டமாக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சித்
தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி பேரிடம் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம் என்று வெற்று விளம்பரம் செய்து, சுமார் 50 லட்சம் பேர்களிடம் கையெழுத்துகள் பெற்றதாகக் கூறி அவற்றை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் காட்சிக்கு வைத்தனர்.
பின் அவை அம்மாநாட்டிற்கு வந்த அனைவரின் காலில் மிதிபட்டதை அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிட்டு,
விடியா திமுக-வின் பித்தலாட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தினர்.
கச்சத் தீவை தாரை வார்த்தது; 50 ஆண்டுகள் முடிந்த பின்னர் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தாமதம் செய்தது, அதன் காரணமாக கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டியது; ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி அளித்தது.
2009-ல் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றுவது போல் 4 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியது; அறிவாலயத்தின் மாடியில் அமலாக்கத் துறை சோதனை, தரைத் தளத்தில்
தொகுதிப் பங்கீடு என்று திமுகவின் காங்கிரஸ் எஜமான விசுவாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நீட் நுழைவுத் தேர்வு ரத்து நாடகத்தின் மூன்றாம் கட்டமாக, நீட் நுழைவுத் தேர்விற்கு தீர்வு காண, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் 9.4.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடத்தப்படும் என்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினாலும், அவரது இளவல் உதயநிதியாலும்
நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க முடியாது என்பதை பல காரணிகளுடன் தெரிவித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம்.
உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஏற்கெனவே அம்மாவின் அரசு தொடர்ந்த வழக்கை விடியா திமுக அரசு வாபஸ் பெற்றபின், புதிய வழக்கை தாக்கல் செய்து, இன்றுவரை அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 9.4.2025 அன்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
வேடிக்கையாக உள்ளது. தமிழக மாணவ, மாணவியரை, பெற்றோர்களை நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களை பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் அரங்கேற்றப் போகிறார்களோ?
மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், நீட் நுழைவுத் தேர்வை
ஒரே கையெழுத்தில் தமிழ் நாட்டில் இருந்து ஒழித்துவிடுவோம் என்று கூறியதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் 19.4.2025 - சனிக் கிழமை மாலை 6 மணி அளவில், சனிக் கிழமை மாலை 6 மணி அளவில்,
தலைநகரங்களிலும் சனிக் கிழமை மாலை 6 மணி அளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்.
கழக மாணவர் அணியின் சார்பில் நடைபெற உள்ள இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்டு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்களும் இணைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு அச்சத்தால் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று இருக்கிறார் இ.பி.எஸ்.
- நீட் விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று முதுகெலும்போடு அறிவிப்பாரா?
நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,
'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், "#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.
விரைவில் விடை கிடைக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
- பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட உறுதிமொழி வருமாறு:-
மக்களாட்சியின் மகத்துவத்தையும், மாண்பையும் எடுத்துரைத்த, இதய தெய்வம் அம்மா வழியில், தொடர்ந்து பயணிப்போம். தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறு நடை போடுவோம். எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளை தூள் தூளாக்குவோம் என்று, வீர சபதம் ஏற்கிறோம்.
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலரச் செய்திட, தமிழ் நாடு, தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்ந்திட, பார் போற்ற, தமிழகம் சிறந்து விளங்கிட, அயராது உழைப்போம்.
பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக் கடன் ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், விலைவாசி குறையுமென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றார். செய்தாரா?
கழக ஆட்சியிலும், மழை வந்தது; புயல் வந்தது. அப்போதெல்லாம் மக்களுக்கு, பல்வேறு வகைகளில், துணை நின்றோம்.
தற்போதைய ஆட்சியிலே, பத்து நாள் மழைக்கே, தலைநகர் சென்னை, பரிதவித்தது.
மக்கள் நலத்திட்டங்களை, நிறுத்தாதே, நிறுத்தாதே. பொய் வழக்குகளைப் போட்டு, கழகத்தை, முடக்கி விட முடியுமா? அழித்துவிட முடியுமா? எதிரிகள் ஒரு பக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதிவலைகளை அறுத்தெறிவோம். பொய் வழக்குகளை முறித்தெறிவோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இத்தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட, சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று, வீர சபத மேற்கிறோம்!
தமிழ்நாடு தழைக்க, தமிழ் நாடு தழைக்க, உழைத்திடுவோம்! புரட்சித் தலைவரின் பெரும் புகழையும், புரட்சித் தலைவியின் பெரும் புகழையும், எந்நாளும் போற்றிடுவோம்.
இவ்வாறு உறுதிமொழி ஏற்றினர்.
- ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
- உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாக தகவல் வெளியானது.
தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
வரும் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், இன்று இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு சமர்பித்த வரவு, செலவு கணக்குகள் ஏற்கப்பட்டுள்ளது.
- வரவு, செலவு கணக்குகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்தும் பொதுக் குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் வரவு கணக்கு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இடைக்கால அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டு 2021-2022ம் ஆண்டுக்கான அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி அனுப்பிய இந்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. செப்டம்பர் 29-ந்தேதி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய ஆவணங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அந்த வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது வருமானவரி கணக்கும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே செலுத்தப்பட்டு அதன் நகல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வரவு செலவு கணக்கு பதிவேற்றம் என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைக்க சாதகமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
- எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறி விசாரணையை தொடங்கினார்கள்.
- எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் எதிர் மனுதாரர்கள் 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க இயலாது என்றும் ஓ.பன்னீர் செல்வம் ஐகோர்ட்டில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதில் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது சரிதான் என்றும் தீர்ப்பு கிடைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் இரு தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட் டில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு முறையிட்டார்.
இதற்கு பதில் அளித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக 30-ந்தேதி (இன்று) மனு செய்யுங்கள் நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று கூறி இருந்தது.
அதன்படி விரிவான மனு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையாக தாக்கல் செய்யப்பட்டு அது கோர்ட்டில் 'நம்பர்' ஆனது.
அந்த மனுவில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்ற வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் (எடப்பாடி பழனிசாமி) கட்சியை வழி நடத்தி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த னர்.
அது மட்டுமின்றி தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள கோர்ட்டு உத்தரவிட கோரியும், தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறி விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் எதிர் மனுதாரர்கள் 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
இதையொட்டி தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர். பதில் அளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். அத்துடன் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.
- காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
- சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் அரைஸ், இளைஞரணி சண்முகராஜ், பிஆர்பி. ராஜா, இளை ஞரணி செயலாளர் மகேஷ், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என பலர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பர மசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா பேசியதாவது:-
தற்போது தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு பின்னர் 4 ஆண்டு காலம் நல்லாட்சி நடத்திய திறமை யான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், மினி கிளினிக், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் பைக் உள்ளிட்டவை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. சரியான பாதையில் அ.தி.மு.க. தான் பயணிக்கிறது என்பதை அறிந்து அ.ம.மு.க. இளை ஞர்கள் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்ஐஏ, யுஏபிஏ சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
- இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன்.
மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.