search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Office"

    • ராமநாதபுரத்தில் கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகத்தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடைநிலைக்கல்வி)பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வித்துறையிலுள்ள பள்ளிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, 2 அலகுகளையும் மாவட்டக்கல்வி அலுவலர் நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டன.

    இதனால் கடந்த 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளாக கல்வித் துறை பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தன. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் புதிய அரசாணை 151 பிறப்பிக் கப்பட்டு, பள்ளிக்கல்விக்கும், தொடக்கக்கல்விக்கும் தனித்தனியான மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் தற்போது பெரும்பா லான மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறையிலுள்ள இடைநிலைக் கல்விக்கும்,தொடக்கக் கல்விக்கும் மாவட்டத்திற்கு தேவையான மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கக்கல்விக்கு இரண்டு மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் இடைநிலை கல்விக்கு ஒரே ஒரு மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய ராமநாத புரத்தை மையமாக வைத்து அரசாணை 151-ன் படி ஓரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டக்கல்வி அலுவர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்வித்துறை பணியாளர்கள் ஆகியோர் தங்களுடைய அன்றாட பணிகளை மிகவும் சிரமத்துடன் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட எல்கை ஓரங்களிலுள்ள பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்க்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்களின் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது, அதேபோல் பள்ளி ஆசிரியர்களின் பணப் பலன்களை பெற்று வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    ஒரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலரால் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் முழுமையாக ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்த தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பள பட்டியலை சரி பார்த்தல்,வருடாந்திர ஊதிய உயர்வு ஆணை வழங்குதல் போன்ற பணிகளையும் மாவட்டக்கல்வி அலுவலரே செய்வதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணப் பலன்களை பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடைநிலைக்கல்விக்கு பரமக்குடியை மையமாக வைத்து கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
    • கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான் ( வயது 17), சிவ சண்முகம் ( 15).

    அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்க ளும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் காரணம் கேட்டபோது சரியான தகவல் கூறவில்லை என தெரிகிறது.

    போராட்டம்

    இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    தற்கொலை மிரட்டல்

    இந்நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சகோதரர்கள் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×