search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Policy"

    • பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது.
    • மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழக அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

    புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில் 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியையே மத்திய அரசு கொடுக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்டம் முழுவதும் அறிவியல் பிரச்சாரப் பணி களை தீவிரமாக மேற்கொள் வது, புதுக்கோட்டையில் செயல்படும் வகையில் தமிழக அரசு புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்,

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செய லாளர் ஜெயராம் அனை வரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்சதாசிவம் எதிர்கால பணிகள் குறித்தும் மாநில பொதுக்குழு உறுப்பி னர் மணவாளன் மாநில செயற்குழு முடிவு கள் குறித்தும் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜெயபாலன், ராம திலகம், கமலம், ரகமதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் அறிவியல் பிரச்சாரப் பணி களை தீவிரமாக மேற்கொள் வது, புதுக்கோட்டையில் செயல்படும் வகையில் தமிழக அரசு புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பாலித்தீன் பைகள் பயன்பாட்டைக் குறைத்து காகிதப்பைகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார பணிகளை மேற்கொள்வது, தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட வேண்டும், சென்னையி லிருந்து செங்கோட்டை வரை புதுக்கோட்டை வழியாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு தீர்மானத்தின்படி மாநிலக் கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் வருகுற 28-ந்தேதி அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

    இதுசார்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மாநிலக் கல்விக் கொள்கை சார்பான தங்களது எழுத்து மூலமான கருத்துக்களை சேலம், கோட்டை, நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20-ந் தேதிகளில் தங்களது முழுமையான முகவரி மற்றும் செல்போன் விவரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாநில கல்வி ெகாள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை (14-ந் தேதி) மதியம் 2 மணியளவில் நடக்கிறது.

    மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் எஸ்.எச்.என்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்களது கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து இந்த கூட்டத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×