என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Educational equipment"
- அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2½ லட்சம் கல்வி உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
- திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி உள்ளது. இதில் கிராமத்தைச் சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக பள்ளிக் குழந்தைகள் உட்காருவதற்காக மேஜை, நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்துள்ளனர்.
இது தொடர்பாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆர்.பி. உதயகுமார் நேரில் வருகை புரிந்தார்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மேலும் கிர்டிட் அக்ஸஸ் கிராமீன் லிமிடெட் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான இருக்கைகள் மேஜைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை சட்டமன்ற ஆர்.பி. உதய குமார் பள்ளிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செய லாளர் அன்பழகன், டிரஸ்ட் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாச ஆஞ்சிநேய ரெட்டி பிரிவு மேலாளர் பாஸ்கரன், திட்டமிடல் கண்காணிப்பு குழு பிரசாந்த், ராம்குமார், பிரதீப், நிர்வாகத்துறை வேலு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது.
- வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் பிளஸ்-2 வரைக்கும் நாளையும்(திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் வருகிற 14-ந்தேதியும்(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்வதற்கு தேவையான புத்தகப்பை, நோட்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு திருப்பூரில் கடைகளுக்கு பொதுமக்கள் சென்றவண்ணம் உள்ளனர். இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பெரியகடை வீதி உள்பட மாநகரின் பல கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் பள்ளிகளின் சீருடைகளை தைப்பதற்காக சிலர் தையல் கடைகளுக்கு செல்கின்றனர். சிலர் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சீருடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதேபோல், புது ஷூ மற்றும் காலனிகள் வாங்குவதற்காகவும் காலனி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.
பள்ளி திறப்பையொட்டி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிகளின் வகுப்பறைகள் சுத்தம் செய்தல், மேஜை, இருக்கைகள் சுத்தம் செய்தல், கழிப்பிடங்கள், சுற்றுப்புற வளாகம், கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு சரி செய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு-ஜன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
- நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
சங்கரன்கோவில்:
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அணி சார்பில் சங்கரன்கோவில் 30-வது வார்டு காவேரி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பயிலும் 120 மாணவ- மாணவியருக்கு மரக்கன்று, கல்வி உபகரணங்கள் அனைத்தும் மஞ்சள் பையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செய லாளர் ராமலிங்கம், முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.இளைஞர் அணி அன்சாரி தொகுத்து வழங்கினார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞரணி சரவணன், நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக் குமார், சுப்புத்தாய், வீரா, ரபிக், ஷெரிப், ஹிதாயத், த.மு.மு.க.வை சேர்ந்த ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அயலக அணி சார்பில் முகமது இஸ்மாயில் செய்திருந்தார்.
- மின்வாரிய அதிகாரி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் கந்திலி ஒன்றியம் நத்தம் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வெங்கடாஜலம் கலந்து கொண்டார். சி.செல்வராஜ், தமிழ்ஆசிரியர் கே.விமலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய பொறியாளர் எஸ்.பி. விஜயகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பொருளாளர் தேவராஜன், நிர்வாகச் செயலாளர்பி. சோமு, கே.எம்.சுப்பிரமணியம், கே.எம் டி.சுபாஷ்வக்கீல் ஆர். ஆர். மனோகரன், கலந்து கொண்டு பேசினார்கள் .
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் செயலாளர் பாரதி நன்றி கூறினார்.
- எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.
உடுமலை :
எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் பொருட்டு வரைந்து வண்ணம் தீட்டுதலுக்காக வண்ண கிரையான்கள் மற்றும் வண்ண பென்சில்கள் வருடம் தோறும் அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.
- உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
- பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.
- குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது.
- இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிக்சன் அனைவரையும் வரவேற்றார். இதில் தத்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பியூலாராஜினி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைைமஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி.
- 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருப்பூர் கே.வி.ஆர். நகர் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ரமேஷ், பகுதி கழக துணை செயலாளர் பிரிண்டிங் ரமேஷ், 42 வது வட்ட பிரதிநிதிகள் செல்வக்குட்டி, காமாட்சி ,அவைத் தலைவர் மும்மூர்த்தி, துணை செயலாளர் பால்ராஜ், முனியாண்டி, ஓதியப்பன், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் , சுஜீத்குமார், கணேசன், செல்லம்நகர் சிவா ,கே.வி.ஆர். நகர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்