என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekalaiva"

    • பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

    முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

    • தேர்வுகள் நடத்தப்பட்டால் வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன.
    • இளைஞர்கள் நீதி கோரும்போது அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது.

    அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை.

    தேர்வுகள் நடத்தப்பட்டால் வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது.

    உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சமீபத்திய போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடிய 2 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுவும் முதல் மந்திரியே அந்த மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த பிறகும் இது நடந்துள்ளது.

    பா.ஜ.க. அரசு மாணவர்களின் நம்பிக்கையை உடைத்து, ஜனநாயக அமைப்பை முடக்கிவிட்டது.

    மாணவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

    எந்த நிலையிலும் இளைஞர்களின் குரலை பா.ஜ.க. நசுக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    ×