என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elderly murder"
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது70). தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வந்தார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சமீபத்தில் இறந்து விட்டார்.
இவர்களது 3 மகன்களும், 2 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். கன்னியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நீண்டநேரம் வரை கன்னியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவும் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கன்னியம்மாள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளைபோய் இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தன. மர்ம கும்பல் கன்னியம்மாளை கொடூரமாக கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. கொலை நடந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி ரவி அபிராம் ஆகியோர் பார்வையிட்டனர்.
கன்னியம்மாள் உடல் கிடந்த இடம் அருகே சிறிய கத்தி, உடைந்த வலையல்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். மோப்பநாய் டைகர் கொலை நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று சுடுகாடு அருகே நின்று விட்டது. அங்கிருந்து வாகனத்தில் கொலை கும்பல் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
கன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே அவரது இட்லி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
- உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண புதுச்சேரி பகுதிமட்டுமின்றி கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வீராம்பட்டினத்தில் தங்கி விழாவை கண்டுகளிப்பது வழக்கம்.
அதுபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த வள்ளிமலை (வயது 60) என்பவர் வீராம்பட்டினம் திருவிழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்.
அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே வள்ளி மலை வீராம்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவர் சாமி வேடம் அணிந்து விழாவை காணவரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்தார். நேற்று இரவு கோவில் எதிரே ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் வள்ளிமலை சாமியாடி பக்தர்களிடம் யாசகம் பெற்றுக்
கொண்டிருந்தார்.
அப்போது வள்ளிமலை திடீரென அவ்வழியே சென்ற ஒரு போதை வாலிபர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் விழா பந்தலில் கரும்பு ஜூஸ் வியாபாரத்திற்காக குவித்து வைத்திருந்த கரும்பை எடுத்து வள்ளி
மலையை தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் வள்ளிமலை கீழே சரிந்தார். இதனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அருகில் விழாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டனர்.
இதையடுத்து உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் வள்ளிமலையை அடித்து கொலை செய்தது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியிலும் விழாவைகாண வந்த பக்தர்கள் மத்தியிலும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 75).
இவரது 4 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆபிரகாம் இறந்துவிட்டதால் பொன்னம்மாள் மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.
சமீபத்தில் அவருக்கு துணையாக மருமகள் மற்றும் பேரன் சொந்த ஊருக்கு வந்து தங்கி உள்ளனர். கடந்த 11-ந்தேதி மாலையில் காருக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற பொன்னம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து சேரன்மகா தேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலையை அந்த 2 பேர் மட்டும்தான் செய்தார்களா? அல்லது கூட்டாளிகள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
- மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.
அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.
நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48) கட்டிட மேஸ்திரி. இவருக்கு3 மகன்கள் உள்ளனர். நேற்று எட்வினின் இளைய மகன், கிருஷ்ணகுமாரின் மகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிருஷ்ணகுமாரின் மகன் தனது தாய் கல்பனாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்பனா அவரது தந்தை நாகராஜ் (56) ஆகியோர் எட்வினின் வீட்டுக்கு சென்று சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் (29) ஆகியோர் சேர்ந்து அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜன் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பயந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்தனர். பின்னர் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சோமனூர் பகுதியில் பதுங்கி இருந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கெங்கம்பட்டியை அடுத்துள்ள கரையிபட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவர் நேற்று அங்குள்ள கலையரங்கம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மருதுபாண்டியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது மருதுபாண்டியனின் தாத்தா சின்னகருப்பன் (வயது 70) அங்கு வந்து சண்டையை விலக்கி வைத்து சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை கீழே தள்ளி பிரச்சினை செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர்.
கீழே விழுந்த சின்னகருப்பன் தலையில் ஊமைக்காயம் ஏற்பட்டது. இதை அறியாத அவர் வீட்டுக்குச் சென்று தூங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை சின்ன கருப்பன் பிணமாக கிடந்தார். 3 வாலிபர்கள் கீழே தள்ளியதில் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து மருதுபாண்டியன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதிகா, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்