என் மலர்
நீங்கள் தேடியது "Electric Car"
- ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.
புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.
இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- லோடஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடல் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய லோடஸ் எலெக்ட்ரிக் கார் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
ப்ரிட்டனை சேர்ந்த கார் உற்பத்தியாளரான லோடஸ் தனது முதல் எஸ்யுவி- எலெட்ரி மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய லோடஸ் எலெட்ரி மாடல் அதிகபட்சம் 905 ஹெச்பி பவர், 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என லோடஸ் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் லோடஸ் எலெட்ரி மாடலின் வினியோகம் துவங்குகிறது. புதிய லோடஸ் எலெட்ரி- எலெட்ரி, எலெட்ரி எஸ் மற்றும் எலெட்ரி ஆர் என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. முற்றிலும் புதிய 800வி எலெட்ரி பிளாட்பார்மில் லோடஸ் எலெட்ரி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மூன்று வேரியண்ட்களிலும் 112 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

எலெட்ரி மற்றும் எலெட்ரி எஸ் மாடல்களில் 6.3 ஹெச்பி பவர், 710 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிங்கில்-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 258 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
லோடஸ் எலெட்ரி ஆர் மாடலில் 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டூயல் மோட்டார் செட்டப் 905 ஹெச்பி பவர், 985 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.95 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். முழு சார்ஜ் செய்தால் 490 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
- ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
- புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு சீட்களை கொண்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கி உள்ளது. புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது.
புதிய ஸ்பெக்டர் மாடல் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதவீதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும். அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விற்பனை சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்திய விற்பனை துவங்கும்.
- வால்வோ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வால்வோ நிறுவனம் தனது EX90 பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வால்வோ நிறுவனம் தனது SPA2 பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கும் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இல்லாத வகையிலான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய டீசர்களில் புதிய EX90 மாடலின் இண்டீரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி டேஷ்போர்டில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நேவிகேஷன், மீடியா, போன் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், சீட் வெண்டிலேஷன் என ஏராளமான அம்சங்கள் புது வால்வோ எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் வழங்கப்படுகிறது. இந்த காரில் கூகுள் சார்ந்த யுஎக்ஸ் இண்டர்பேஸ் பயன்படுத்துகிறது. எனினும், இதில் ஏராளமான AI அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் அளவில் சிறிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழி, ரேன்ஜ் விவரங்கள், கியர் நிலை, ADAS தொடர்பான விவரங்களை காண்பிக்கிறது. இதன் ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டு டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்கள் அதிக தரமானது என்பதையும் விட சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.
தோற்றத்தில் இந்த கார் வட்டம் மற்றும் மெல்லிய ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் சுத்தியல் போன்ற டிஆர்எல்கள் உள்ளன. புதிய வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

"இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."
"வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."
"தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.
- ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.
ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.
2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
- இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரு எலெக்ட்ரிக் கார் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன.
சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். எனினும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் ஐயோனிக் 5 மாடல் இந்தியா வருகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் E-GMP பிளாட்பார்மை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. மேலும் இது ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது E-GMP பிளாட்பார்மில் உருவான முதல் கார் ஐயோனிக் 5 இந்தியா வர இருக்கிறது. இதே பிளாட்பார்மில் தான் கியா EV6 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மூலம் ஹூண்டாய் E-GMP பிளாட்பார்மையும் இந்தியா கொண்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ஹூண்டாயின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

புதிய ஐயோனிக் 5 மாடலில் உள்ள அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 5-லின்க் ரியர் சஸ்பென்ஷன், காரில் பயணம் செய்வோருக்கு தலைசிறந்த சவுகரியத்தை வழங்குவதோடு, சிறப்பான ஹேண்ட்லிங் வழங்குகிறது. மேலும் இந்த காரை 350 கிலோவாட் DC சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும்.
"மொபிலிட்டி துறையில் சாத்தியமானவற்றுக்கு சவால் விடும் எங்களின் பானி, எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் -E-GMP-இல் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியாவில் E-GMP அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர முடியும். இந்தியாவில் உள்ள புது தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தலைசிறந்த எலெக்ட்ரிக் வாகனங்களை E-GMP உருவாக்கும்." என ஹூண்டாய் மோட்டார் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்து இருக்கிறார்.
- வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகமானது.
- புதிய வால்வோ EX90 மாடல் ஏராளமான பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.
வால்வோ நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய EX90 மாடலை அறிமுகம் செய்தது. வால்வோ ஏற்கனவே விற்பனை செய்து வரும் XC90 காருக்கு இணையான எலெக்ட்ரிக் வடிவம் தான் புதிய EX90. இந்த கார் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தோற்றத்தில் புதிய EX90 மாடல் வால்வோ பாரம்பரியத்திலேயே காட்சியளிக்கிறது. இதில் உள்ள லைட்டிங் மற்றும் டிசைன் அம்சங்கள் வால்வோ வழக்கப்படி மிக கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டிசைன் பெற்று இருக்கிறது. இதே பிளாட்பார்மில் எதிர்கால வால்வோ கார்களும் உருவாக்கப்படும்.

கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் சார்ந்த செங்குத்தான டச் ஸ்கிரீன் செண்டர் கன்சோல் உள்ளது. இது என்விடியா டிரைவ் ஏஐ பிளாட்பார்ம்களான சேவியர் மற்றும் ஒரின் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்பார்ம் முன்பை விட அதிகளவு மேம்பட்டு இருக்கின்றன. இதன் டிரைவர் டிஸ்ப்ளே மெல்லியதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீன் மீது ஏராளமான ரேடார்கள், லிடார்கள், கேமரா மற்றும் பாதுகாப்பு சென்சார்கள் உள்ளன.
இவை EX90 மாடலை இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பாதுகாப்பான வால்வோ கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இதில் பைலட் அசிஸ்ட், தானியங்கி வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த காரில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 370 கிலோவாட் திறன் கொண்டுள்ளது.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். புதிய வால்வோ EX90 மாடலில் பை-டைரெக்ஷனல் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்ததும், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.
- போக்ஸ்வேகன் நிறுவனம் உலக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
- இதே போன்று இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில் ஏராளமான நாடுகளில் போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்ஸ்வேகன் ஐடி. குடும்பத்தில் இருந்து இதுவரை ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
அக்டோபர் 2020 வாக்கில் போக்ஸ்வேகன் ஐடி.3 மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தை அந்நிறுவனம் துவங்கியது. தற்போது உலகளவில் கார் வினியோகத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து லட்சம் மைல்கல் எட்டிய செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றை வினியோகம் செய்யும் பணிகளில் போக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகிறது.

2033 முதல் ஐரோப்பாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐரோப்பாவில் 2030 முதல் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த போக்ஸ்வேகன் வாகனங்களில் 70 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகிறது.
"1 லட்சத்து 35 ஆயிரம் ஐடி. கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வினியோகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எனினும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலான சூழல் நிலவுவதால், உற்பத்தி திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டியாத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்." என போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் பிரிவுக்கான நிர்வாக குழு உறுப்பினர் மெல்டா அபெ தெரிவித்து இருக்கிறார்.
- பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விலையை அறிவித்து இருக்கிறது.
- முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று நிலையில், விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விலையை அறிவித்து இருக்கிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அட்டோ 3 மாடல் இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். பிஒய்டி அட்டோ 3 மாடல் பௌல்டர் கிரே, பார்க்கர் ரெட், ஸ்கை வைட் மற்றும் சர்ஃப் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 2021 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி அட்டோ 3 மாடல் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்த காரில் பெரிய க்ரோம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், ஸ்போர்ட் பம்ப்பர், 18 இன்ச் வீல்கள், பூட் லிட் மீது பிஒய்டி லோகோ இடம்பெற்று இருக்கிறது. ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் பெரிய வீல்பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையை அட்டோ 3 பெற்றுள்ளது.
பிஒய்டி அட்டோ 3 மாடலில் கீலெஸ் எண்ட்ரி, போர்டபில் கீ கார்டு, மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வித்தியாசமான வடிவங்களில் டேஷ்போர்டு, ஏசி வெண்ட்கள், டோர் ஹேண்டில் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 12.8 இன்ச் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவைகளுக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய பிஒய்டி அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் 7 கிலோவாட் ஹோம் சார்ஜர், 3 கிலோவாட் போர்டபில் சார்ஜர் வழங்கப்படுகிறது.
புதிய அட்டோ 3 மாடலை 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் மூலம் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.5 முதல் 10 மணி நேரம் ஆகும். 80 கிலோவாட் டிசி சிசிஎஸ் 2 பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் ஆகும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் எம்ஜி காம்பேக்ட் EV அறிமுகம் செய்யப்படலாம்.
எம்ஜி நிறுவனம் ஏர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த நிலையில், புதிய எம்ஜி ஏர் EV மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய ஏர் EV மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது இதே மாடல் வுலிங் ஏர் EV பெயரில் இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாடலின் தோற்றம் அதன் இந்தோனேசிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த சிறிய EV மாடலின் வீல்பேஸ் 2010mm ஆகும். இந்த காரின் நீளம் 2.9 மீட்டர்கள் ஆகும். இதில் 20 கிலோவாட் ஹவர் முதல் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.
எம்ஜி ஏர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் முன்புற வீல் டிரைவ் கொண்ட மாடல் 40 ஹெச்பி எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மற்றும் ஒற்றை மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் டாடா ஆட்டோகாம்ப் வழங்கும் என கூறப்படுகிறது.
இரண்டு கதவுகள் கொண்ட எம்ஜி ஏர் EV மாடலில் நான்கு பேர் அமரும் இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டில் டூயல் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன. இவற்றில் ஒன்று இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் செயல்படுகின்றன.
இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஏர் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நகர பயன்பாட்டுக்காக புது கார் வாங்குவோரை குறிவைத்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வர்த்தக பிரிவிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Courtesy: MotorBeam