என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "electric wires"
- மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.
- கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.
தஞ்சாவூர்:
மழை காலங்களில் பொது மக்கள் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
பழுதடைந்த மின் இணை ப்பு சர்வீஸ் வயர்களை அருகில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் தெரி வித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது சர்வீஸ் வயரில் ஜாயிண்ட் மற்றும் சர்வீஸ் பைப் வாய்பகுதியில் ஜாயிண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும்.
மின் இணைப்பு சர்வீஸ் வயர்களை இன்சுலேட்டர் உருளை கொண்டு இழுத்து கட்ட வேண்டும்.
வீட்டு மின் இணைப்பில் உள்ள நில இணைப்பு பைப் மற்றும் வயர் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நில இணைப்புக்கு செல்லும் கம்பிகளை தொடக்கூடாது. சர்வீஸ் மின் பைப்பில் கொடிகளை கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
மின் இணைப்பில் ஈஎல்சிபி எனப்படும் எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அல்லது ஆர்சிடி'என அழை க்கப்படும் 'ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் பொருத்துவதன் மூலம் மின் விபத்துக்களை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- ராதாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.
- தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.
பணகுடி:
ராதாபுரம் போலீஸ் நிலைய எல்ைலைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலா புரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.
மின் வயர் திருட்டு
இந்த தோட்டங்களை குறிவைத்து பல மாதங்களாக மின் வயர் மற்றும் மின் மோட்டார்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குறிச்சி ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.
- மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
- மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம் அருகே மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
அதேபோல வையாபுரி தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதாலும், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குடியிருப்பு வீடுகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின் கம்பிகளால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர்.
மின்பாதையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சோழன் வாயிலாக மின்வாரியத்திடம் கிராமமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடுவதற்கு மின்கம்பம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடை பெற வில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:-
ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பு குடியிருப்பு பகுதியில் அதிகளவில் மின்கம்பிகள் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
பலத்த காற்று அடிக்கும் சமயத்தில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின் கம்பிகள் அறுத்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் மின்சாரம் இல்லாமல் பல நாட்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக நடவடி க்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளை பயிரிட்டுள்ளார்.
- திடீரென மின்கம்பிகள் உரசி தீப்பொறி உருவாகி சுமார் 500 வாழைகள் தீயில் கருகின.
பணகுடி:
திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் வாழை பயிரிட்டு வரும் இடத்திற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி உருவாகி சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீப்பிடித்து தீயில் கருகின.
மேலும் அருகில் இருந்த 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீ வராமல் இருக்க தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகவும், ரூ.2 லட்சம் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயி வெற்றிவேல் வேதனையுடன் தெரிவித்தார்.
- பணகுடி அருகே தோட்டத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மின் வயர்கள் திருட்டு
- சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் போர்வெல் கிணறு மின் வயர்களை வெட்டி எடுத்து சென்றுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
பணகுடி:
பணகுடி அடுத்த வடலிவிளையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவருக்கு அங்கு சொந்தமான சுமார் 45 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை பயிர் நடவு செய்யப்பட்டு வளர்த்து வருகிறார். இதற்காக பெருமாள் தன்னுடைய இடத்தை சுற்றி சுமார் 4 போர்வெல் கிணறு அமைத்து அதிலிருந்து வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்.
நேற்று இரவு மர்ம நபர்கள் அவருடைய தோட்டத்திற்கு சென்று மின் வயர்களை அரிவாளால் வெட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பெருமாள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடலிவிளை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் போர்வெல் கிணறு மின் வயர்களை வெட்டி எடுத்து சென்றுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்