search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical train"

    • பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும்.

    சென்னை:

    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை புறநகர் ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    எனவே பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிடவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கடந்த மாதம் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 3 பேரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய 5 பேர் கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    டி.ஐ.ஜி. ராமர் உத்தரவின்படி துணை போலீஸ்சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மின்சார ரெயிலில் பயணிகளை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் கும்மிடிப்பூண்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லெவின் என்கிற பூச்சி (26), பொன்னேரி செஞ்சம்மாள் நகரை சேர்ந்த விஜி என்கிற கெல்லீஸ் (24) ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்தார்.

    கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தபோது மின்கம்பத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கிண்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 18). இவர் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.

    ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஜெயச்சந்திரன் படிக்கட்டில் தொங்கியபடி சென்றார்.

    கிண்டி அருகே வளைவில் திரும்பி ரெயில் வந்த போது தண்டவாளம் அருகே இருந்த மின் கம்பத்தில் ஜெயச்சந்திரனின் தலை மோதியது.

    இதில் நிலை தடுமாறிய அவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    மின்சார ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். #arrest

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நேற்று மாலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    ஒரு பெட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ்காரர் சந்திரசேகர் அந்த மாணவர்களை தட்டிக் கேட்டார்.

    ‘‘மற்ற பயணிகளுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? அமைதியாக வாருங்கள்’’ என்று கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீஸ்காரர் சந்திரசேகரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீஸ்காரரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் அஜித், வின்சென்ட், சுமன்குமார், ஷியாம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான 4 மாணவர்கள் மீதும் போலீஸ்காரரை தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #arrest

    ×