என் மலர்
நீங்கள் தேடியது "Electricity bill"
- சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.
- இன்றைக்குள் இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்தமுடியாது.
சென்னை :
தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்காக, மின்கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரம் பயன்படுத்துவோர் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 65 லட்சம் பேர், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்த்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே கூறிவிட்டார்.
இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது. எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும்.
இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
- 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.
திருப்பூர் :
மின் கட்டணத்தை வசூல் மையங்கள், அரசு, இ - சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். அவற்றில் அலுவலக நேரத்தில் மட்டுமே செலுத்த முடியும்.மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி, பாரத் பில் பே போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்.
மொத்தம் உள்ள 3.40 கோடி மின் நுகர்வோர்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது பல்பொருள் அங்காடி முதல் தள்ளுவண்டி காய்கறி கடை வரை, கூகுல் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.எனவே அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் எப்படி கட்டணம் செலுத்துவது என்பது தொடர்பாக பிரிவு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனால் கட்டண மையங்களுக்கு வந்து நுகர்வோர்கள் சிரமப்பட வேண்டியதில்லைங வசூல் பணமும் உடனே மின் வாரிய வங்கி கணக்கில் சேர்ந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன், அனைத்து பிரிவு அலுவலகத்திலும் பாதுகாப்பு வகுப்பு தொடர்ச்சியாக நடத்தி பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணைய வழி மூலமாக செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது மின்சாரம் சம்பந்தமாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
- வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார்.
- மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நூல் மில் உரிமையாளர் விஸ்வநாதன். இவர் தனது மில்லுக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் ரூ.45.225யை ஜனவரி மாதம் 20 ந்தேதிக்குள் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி19ந்தேதி அன்று ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய இணையத்தளத்தில் பணம் வரவு ஆகவில்லை.
இதையடுத்து வங்கியில் கேட்டபோது, இணையதள சர்வர் கோளாறு அதனால் பணம் வரவாகவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் தான் இருமுறை மின் கட்டணத்தை செலுத்தியது குறித்தும், தனது பணத்தை திரும்பத் தரக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர், பல்லடம் வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு ) அரி பாஸ்கர், ஆகியோர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, மில் உரிமையாளர் விஸ்வநாதன் இணையதளத்தில் செலுத்தப்பட்ட மின் தொகையை திரும்ப அவரது வங்கி கணக்கிற்கு செலுத்த நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.
- பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
- மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
பல்லடம் :
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரவாரிய கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த (மார்ச்) மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த கெங்கநாயக்கன்பாளையம் பகிர்மானம் மின் நுகர்வோர்கள் கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்தலாம். மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
- ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.
உடுமலை :
உடுமலை எஸ்.வி., புரம் மற்றும் கொமரலிங்கம் பெருமாள் புதூர் மின் இணைப்புகளுக்கு நடப்பு மாத மின் கணக்கீடு செய்யாததால் ஜனவரி மாத தொகையை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, எஸ்.வி., புரம் பகிர்மான மின் இணைப்புகளில் சுமார் 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் 2023 மார்ச் மாதத்திற்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.ஆகவே எஸ்.வி., புரம் மின் பகிர்மான நுகர்வோர் ஜனவரி மாதம் செலுத்திய தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கொமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, பெருமாள் புதூர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் மார்ச் 2023 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.ஆகவே பெருமாள்புதூர் பகிர்மான மின் நுகர்வோர், கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது
- முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.
மங்கலம் :
தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு ள்ளனர்.அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வா ரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டமை ப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் 3 முதல்4 மின் கட்டண பில்கள் வந்து ள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்து ள்ளோம் என்றனர்.
- ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
- இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
தாராபுரம் :
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
எனவே மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள–ளது.
- போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
- உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது.உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை கட்டணத்தைச் செலுத்துவதில்லை என்று கூறி, விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அறிவித்த மின் கட்டண உயர்வில் இருந்து 50 சதவீதத்தை அரசு குறைத்தது. மேலும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக வழங்கவும் அறிவிப்பு வெளியானது.
போராட்டம் காரணமாக 6 மாத மின் கட்டணம் விசைத்தறியாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை தவணை முறையில் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறியாளர்கள், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''விசைத்தறியாளர் கோரிக்கையை ஏற்று தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ளதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் என்ற முறையில் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். விசைத்தறியாளர் நலனை கருத்தில் கொண்டு அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக மீண்டும் மின் துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
- புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- செயற்பொறியாளர் வேண்டுகோள்
புதுச்சேரி:
புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், துப்புராயப்பேட், நெல்லித்தோப்பு, எல்லைப்பிள்ளைச் சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
- மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
பல்லடம் :
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.
இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
- முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.
கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.
கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.