search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity employees"

    • மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
    • அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார்.

    தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.

    இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் செயலாளர்கள் காணிக்கைராஜ் (தஞ்சை), கலைசெல்வன் (நாகை), ராஜேந்திரன் (திருவாரூர்), தலைவர்கள் அதிதூதமைக்கேல்ராஜ் (தஞ்சை), வெற்றிவேல் (நாகை), சகாயராஜ் (திருவாரூர்), பொருளாளர்கள் சங்கர், கண்ணன்,முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் பல்லடம் கிளை சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழக மின்வாரியத்தில் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் 58000 காலிபணியி டங்களை நிரப்பிட வேண்டும்.அரசாணை எண் 100/19.10.2010 இன் படி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும்,வாரிய ஆணை எண் 02 ஐ/12.04.2022/முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு,விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு எம்பிளாயீஸ் பெடரேஷன் சங்க செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் அங்குராஜ், வடுகநாத சாமி, சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் 3 சதவீதம் வழங்கப்படுகிறது.
    • 2 மாதத்திற்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படும்.

    தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியானது கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரை கணக்கிடப்பட்டு 2 மாதத்திற்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படும்.

    மேலும், செப்டம்பர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (இ.சி.எஸ்.) மூலம் வழங்கப்படும். அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில் 1 ரூபாய்க்கும் குறைவாகவும், 50 காசுக்கு அதிகமாகவும் இருக்குமாயின் அதனை ஒரு ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

    இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படியானது தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4 ஆயிரத்து 100 முதல் ரூ.12 ஆயிரத்து 500 பெறும் பணியாளர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய ஆணையின் படி, அகவிலைப்படியானது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×