என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elephant corridors"
- கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத்துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மொத்தம் 5859 ஏக்கரில் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து விவசாய உறுப்பினர்களும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தென்னை, பாக்கு, வாழை மற்றும் காய்கறிகளை பிரதான பயிர்களை விளைவித்து வருகிறோம்.
தமிழக வனத்துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத்துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. அவ்வாறு யானைகள் அதிகம் இடம்பெயரும் பகுதியாக இருந்தால் எங்களால் இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இருக்க முடியாது.
எனவே, காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.
எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.
- மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது
- சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்த ப்பட்டது.
கோவை,
கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.
தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் தாழ்வான மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வன எல்லைப் பகுதிகள், விளை நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படு கிறதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சீரநாயக்கன்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட மலையடிவார பகுதிகளில் உள்ள யானை வழித்தடங்களில் பழுதான மின்கம்ப ங்களை மாற்றுவதற்கும் மற்றும் தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது.
இதில் வள்ளியம்மன் கோவில் வீதி, கணபதி நகர், தி.ரு.வி.க காலனி, மருத மலை அடிவார பகுதிகள், சாடிவயல், பூண்டி, வடிவே லம்பாளையம், தொப்பிலி பாளையம், பெருமாள் கோவில் வீதி, சென்னனூர், கரடிமடை, மத்திபாளையம், தீத்திபாள ையம்பஞ்சாயத்து, அய்யாசாமி கோவில் சுற்று வட்டார பகுதி, ராமசெட்டி பாளையம், ஜெகநாதன் நகர், கே.பி.எஸ் காலனி, குப்பேபாளையம், வளைய ம்பாளையம், காளியம்பா ளையம், நரசீபுரம் மற்றும் கீரின் ஹோம் ஆகிய பகுதிகளில் நடந்தது.
மேலும் பேரூர் வட்டத்துக்குட்பட்ட கலிக்கநாயகன்பாளையம் கிராமம், ஓணாப்பாளை யம், கிரீன் ஹோம் உள்ளிட்ட வனப் பகுதிக்கு ட்பட்ட யானை வழித் தடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வ ழுத்த மின்பாதைகள், மின்பாதைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறை, வனத்து றையினர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்துக் கொண்டனர்.
அப்போது தாழ்வாக செல்லும் மின் இணைப்பு களால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன் படுத்துமாறும் அப்பகுதி மக்களிடம் வலியுறுத்த ப்பட்டது. வன எல்லை ப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ,
சட்டத்து க்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.
யானைகளின் வழித் தடங்களான மசினகுடி, மாயார், மாவல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு ஜூலை 12-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர். அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித்தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 27 ரிசார்ட்டுகள் சீல் வைக்கப்பட்டது. கோர்ட்டு அவகாசம் வழங்கிய 12 ரிசார்ட் உரிமையாளர்கள் ஆவணங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். ஆவணங்களை கலெக்டர் ஆய்வு செய்த போது 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே இந்த 10 ரிசார்ட்டுகளை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மீதமுள்ள 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.
மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.
யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள். #SupremeCourt #ElephantCorridors
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்