என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Elevation"
- கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
- பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
ஏற்கனவே மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 பேரில் 6 பேர் குணமாகினர். தற்போது 86 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோன பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் அனைவருக்கும் பரிசோதைனையை செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாய–மாக்–கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியா–தவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.13 சென்ட் நிலம் உள்ளது. இதில் 1986-ம் ஆண்டு 6 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. சாலை விரிவாக்க பணியையொட்டி 4 கடைகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதன்பிறகு 2 கடைகள் மட்டுமே இடிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது. அதில் டீக்கடையும், சலூன் கடையும் அடங்கும்.
இந்த நிலையில் 2 கடைகளின் அருகே சிலர் மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பெண்களும் மதுபிரியர்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக இந்த 2 கடைகளையும் அகற்ற கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 கடைகளை அகற்றி விட்டு நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சாலை விரிவாகத்துக்கு இடையூறாக இருந்த 2 கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு (கொலீஜியம்) வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 11-ந் தேதி கூடி ஆலோசித்த நீதிபதிகள் குழு, காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் உள்பட மேலும் சில ஐகோர்ட்டு நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என்றும், அதுபற்றி மீண்டும் விரிவாக விவாதிப்பது என்றும் தீர்மானித்தது.
அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய குழு நேற்று மீண்டும் கூடி நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. #KMJoseph #Elevation
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.
இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கடந்த 2-ம் தேதி கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.
கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.
கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த நீதிபதி ஏற்கனவே இருப்பதால், ஜோசப் பெயர் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. #KMJoseph
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.
கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கூடிய கொலிஜியம் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய நீதிபதிகளில் ஒருவராவார்.
2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.
கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. #KMJoseph