search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elimination"

    • இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நகராட் சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் நிலையம் வெளிப்பகுதியில் உள்ள சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகள் முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் அட்டைகள் அமைத்தும், சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர். இதனால் தினமும் இளம்பிள்ளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த விஷயம் சேலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு நேற்று ஆக்கிரமிப்பு களை அகற்றும் நடவ டிக்கையை தொடங்கினர். ஜே.சி.பி எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் இளம்பிள்ளை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்றக்கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா கூறியதாவது:-

    மக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து தமிழக அரசும், காவல்துறையும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.இவற்றை விரைவில் அகற்றாவிட்டால் இந்து தேசிய கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்து தேசிய கட்சி மேற்கொள்ளும்.

    இது குறித்து ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரம் கோர்ட்டு முன்புறம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    மேலும் விழுப்புரம் நேருஜி சாலையில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையின் வலதுபுறமும், அடுத்த 15 நாட்கள் சாலையின் இடதுபுறமாகவும் சுழற்சி முறையில் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரமாக இருந்த பழக்கடைகள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள், கடைகளின் விளம்பர பலகைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 
    ×