search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emanuelsekaran"

    • இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை உள்ளது. அவரது நினைவு தினத்தை யொட்டி இந்த சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்-அமைச்ச ருக்கு ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் நன்றிகள் தெரிவித்து கொள்வதாக அப்போது எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் நகர செய லாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் மலர் மன்னன், குமார், மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 65-வது நினைவு தினத்தையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினை விடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர். முதலில் இமானுவேல்சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில் பேரன்கள் சக்கரவர்த்தி, சந்திரசேகர், பேத்திகள் சுந்தரி, ரிஸ்வானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் இன்று காலை இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் சுர்ஜித் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி.ஐ.ஜி.க்கள், 24 எஸ்.பி.க்கள், 26 ஏ.டி.எஸ்.பி.க்கள், 60 டி.எஸ்.பி.க்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் 150 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மேலும் 3 டிரோன் காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கமுதி பகுதியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சென்று வந்தன.

    ×