என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engaged"

    • ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்
    • ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் தற்போது வரை 38 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடம் பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐபிஎல் மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இவர் ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 956 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாட காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


    இந்நிலையில் 28 வயதான வெங்கடேஷ் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவருக்கும் ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது

    இந்திய வீரர் ரிங்கு சிங், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸ்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அதிரடியின் மூலம் இந்திய அணிக்கு கெத்தாக இடம் பிடித்தவர் ரிங்கு சிங். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ரூ.13 கோடிக்கு தக்கவைத்துள்ளது

    இந்நிலையில் ரிங்கு சிங்கிற்கு சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப்ரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளும் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 500 ரன்களை எடுத்துள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். #Archer #DeepikaKumari #AtanuDas
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாசை திருமணம் செய்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் தீபிகாவின் தாயார் கீதா தேவி தெரிவித்துள்ளார். #Archer #DeepikaKumari #AtanuDas
    பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அவரது காதலியான அமெரிக்க மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. #justinbieberengaged
    கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார்.

    இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்றாக சுற்றித் திரிந்த ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை ஜஸ்டின் பீபரின் தந்தை ஜெர்மி, தாயார் பட்டி மாலெட் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளனர்.
    ×