என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Enrollment camp"
- நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.
- தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும்.
திருப்பூர்:
பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் - தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் இணைந்து நடத்தும் திருப்பூர் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்என்சிவிடி.எஸ்சிவிடி., திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8,10,11மற்றும் 12-ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், எண்- 115, 2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி, பழையபேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரியிலும், இம்மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை ( திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ) ( 9499055695 ,0421-2230500, 9894783226 , 9499055700, 9499055696, 9944739810 , 9442178340 , 9842481456 ,770843777 , 9442651468) ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்களில் பதிவு நடை பெறுகிறது
- மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தாலுகாவில் மகளிர் உரிமைத் திட்ட உதவி பெற முதற்கட்டமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 83 ரேஷன் கடைகளுக்கு 87 மையங்களிலும், 2-ம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்க ளில் பதிவு நடை பெறுகிறது.இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி, பாப்பனாப் பட்டு, சாமியாடி குச்சி பாளையம் உள்ளிட்ட சில மையங்களில் முன்னோட்ட பதிவு துவங்கியது.
அதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பதிவு மையங்களில் மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பயனாளிகளிடம் வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதா எனவும், சர்வர் வேலை செய்கிறதா எனவும், தினமும் டோக்கன் படி பதிவு செய்ய ஆலோசனை களை வழங்கினார். அப்போது தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணா துரை, தேர்தல் துணை தாசில்தார் ஜோதிப்பிரியா, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், மெகருனிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது.
- தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.
சேலம்:
கருணாநிதி நூற்றாண்டையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளி கள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது. முகாமை மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவ லர் மேனகா ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.
முகாமில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், கலைஞர் நூற்றாண்டை யொட்டி அரசு தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டதின் அடிப்ப டையில் சேலம் மாவட்டத் தில் 5 சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறு கிறது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு காப்பீட்டுத் திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகா மும் இங்கு நடைபெறுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை, ஐ பவுண்டேசனை சார்ந்த மருத்துவ குழுவினர் பங்குபெற்று ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல்நோய் மருத்துவம், சித்தா மருத்துவம், காச நோய், தொழுநோய், புற்று நோய், பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை கள் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்து வம் ஆகியவற்றிக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிர சவத்திற்காக யோக பயிற்சியும் முகாமில் அளிக்கப்பட்டது.
முகாமில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், சுகாதார நிலைக்குழுத்த லைவர் ஏ.எஸ்.சரவணன், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள், துணை இயக்குநர் யோகா னந், கவுன்சிலர்கள் சங்கீதா, கிரிஜா, ஸ்ரீராஜ் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- றப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2023-2ஐ தகுதிநாளாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடைபெறுகிறது. மேலும் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைதிருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையான அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 09.11.2022 அன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுமக்கள் உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே 12:11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்றது. அதை போல் இன்று 26.11.2022 மற்றும் நாளை 27.11.2022 காலை 10.00 மணி முதல் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிக்கு விண்ணப்பங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமே பெற்று ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் பொதுமக்கள் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட வாக்குச்சா வடிகளை அணுகி வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டும், திருத்தங்க ள் இருப்பின், அதனை சரி செய்வதற்குரிய படிவத்தை பெற்று உரிய ஆதாரங்க ளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை சென்று ஆய்வு செய்யும்போது, வாக்காளர்கள் இறந்துவிட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த விவரத்தினை சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் மூலம் உறுதி செய்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்