என் மலர்
நீங்கள் தேடியது "erode by election"
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
- இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடப்போவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
- மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
- 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழுஅமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இ.பி.எஸ். அணியுடன் பேச தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் கூறியதற்கு அவர் மீண்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
- தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- நிர்வாகிகள் தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக நடைபெற இருகின்ற இந்த இடைத்தேர்தலில் த.மா.கா-அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது. எனவே த.மா.கா சார்பில் தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. தேர்தல் பணிக்குழு தலைவர் பி. விஜயகுமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா தலைவர்)
2. ஆர்.ஆறுமுகம் (த.மா.கா மாநில துணைத் தலைவர்)
3. விடியல் எஸ்.சேகர் (த.மா.கா மாநில பொதுச்செயலாளர்)
4. எம்.யுவராஜா (த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர்)
5. எஸ்.டி.சந்திரசேகர் (த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர்)
6. சி.எஸ்.கவுதமன் (த.மா.கா. மாநில தேர்தல் குழு உறுப்பினர்)
7. வி.பி.சண்முகம் (ஈரோடு தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர்)
8. பிரகாஷ் ஜெயின் (த.மா.கா மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்)
9. வி.கே.மணியன் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)
10. சி.சம்பத்குமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா விவசாய அணி தலைவர்)
11. எஸ்.கே.சின்னுசாமி (த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர்)
12. சுந்தரசாமி (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)
13. உழவன் கொற்றவேல் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)
14. புவனேஸ்வரன் (ஈரோடு வட்டார த.மா.கா தலைவர்)
15. கே.பி.ரபீக் (ஈரோடு மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர்)
16. ஓ.கே.ஏ. கதிர்வேல் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா துணைத் தலைவர்)
தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.
- நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகிறது? என்பது அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இதனை வைத்து எடப்பாடி பழனிசாமி பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல், தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தலாகும். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்ட மன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சியான த.மா.கா. குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது. இதனை மனதில் வைத்து கட்சியினர் செயல்பட வேண்டும்.
தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் மத்தியில் சரியாக நாம் கொண்டு சென்று பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடலாம். எனவே அ.தி.மு.க. வெற்றிக்காக பம்பரமாக சுழன்று கட்சியினர் பணிபுரிய வேண்டும்.
ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிடுகிறதே? நம்மால் வெற்றி பெற முடியுமா? என்று தளர்ந்து போகாமல் பணியாற்றுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு நிச்சயமாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதில் எந்த குழப்பமும் அடையாதீர்கள்.
தி.மு.க. அரசு மீது பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேளுங்கள். நாமே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடு புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றுங்கள்.
எதிர்காலத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்கு ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதா? இல்லை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அ.தி. மு.க.வினர் விருப்ப மனுக்களை பெற்றுக் கெள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
- ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் கையில் வைத்து இருக்க வேண்டும்.
- எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்படுகிறதோ அதற்கு ஏற்ப துணை ராணுவத்தினர் வருவார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்கள் சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெளிவாக விளக்கம் அளித்தார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதுவரை பறக்கும் படை மூலம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன வலியுறுத்தியுள்ளதோ அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த முறை கணக்கெடுப்பு படி 20 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதியில் எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்படுகிறதோ அதற்கு ஏற்ப துணை ராணுவத்தினர் வருவார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் கையில் வைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு தொகுதி ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறை குறித்து தெளிவாக விளக்கி கூறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்.
- பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அங்கிருந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், என்.குணசேகரன் உடன் இருந்தனர்.
இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசி ஆதரவு கேட்டார். இரு வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திருமாவளவன் கூறுகையில், "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று கூறினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "ஈரோடு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்" என்றார்.
அதன் பிறகு எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகம் சென்றார். அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஆதரவு கோரினார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு வருமாறு வைகோவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திக்க சென்றார்.
அவருடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் கோபண்ணா, செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
- மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார்.
அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகளை நியமித்து அதிமுக அறிவித்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசிக்க உள்ளார்.
- தேர்தலில் விருப்பமனு பெறுவது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்.
- கடந்த இரு தினங்களாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆலோசனை
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில், தங்கள் தரப்பு வேட்பாளர் தேர்வு, விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலில் விருப்பமனு பெறுவது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
- வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிர்வாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
- தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராமச்சந்திரன் மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக் கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதனை கூறி வாக்கு சேகரிப்போம். வரும் 3-ந் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி.
- கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கடந்த 22ம் தேதி அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும், ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என்றும் கூறினார்.
இந்நிலையில், ஈரோடில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
மேலும் அவர், கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
- வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் தேதி மாற்றம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ஈ.பி.எஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.