என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode News"
- குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
- சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
குண்டம் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து குண்டத்துக்கு தேவையான விறகுகளை மாரியம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பற்றவைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் குண்டம் இறங்க அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொடர்ந்து இன்று தேர் வடம் பிடித்து இழுத்தலும், கோவில் கரகம் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தலும், அதனை தொடர்ந்து கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
- முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது.
ஈரோடு:
ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை தேவலாயம் (சர்ச்) உள்ளது. இந்த தேவலாயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சை யாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கி புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது.
இதைத்தொடர்ந்து வரும் 7-ந் தேதி சிறப்பு திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் தேதி தேர்த்திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 8.15 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜேசாப் ஸ்தனிஸ் நிறைவேற்றுகிறார். திருப்பலி முடிந்ததும் மாலை வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையான ஈரோடு மறைமாவட்ட முதன்மை குரு ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
- 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மே ற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஆந்திரா, பெங்களூர் போன்ற பகுதி யில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இன்று மார்க்கெட்டிற்கு 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவர ப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது வரத்து குறைந்ததன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் 90 வரை விற்ப னையாகி வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்த பெரிய வெங்காயத்தின் விலை இன்று ரூ.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல் கருப்பு அவரை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இன்று ஒரு கிலோ கருப்பு அவரை ரூ.100-க்கு விற்பனை யாகி வருகிறது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட மற்ற காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:
கத்திரிக்காய்-60, பாவைக்காய்-60, புடலங்காய்-40, முள்ளங்கி-35, முருங்கைக்காய்-70, பீர்க்கங்காய்-50, சுரக்காய்-30, பட்டவரை-70, தக்காளி-30-35, காலிபிளவர்-30, புதிய இஞ்சி-110, பழைய இஞ்சி-280, குடைமிளகாய்-60, கேரட்-45, பீட்ரூட்-50, பீன்ஸ்-60.
- சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் அருகே முடுக்கன்துறையில் கடந்த ஒரு வார காலமாக சரியாக குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் புளியம்ப ட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் தொப்பம் பாளையம் துணை மண்டல அலுவலர் சக்திவேல் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக சாலை மறியல் செய்து வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் உடனடியாக உடைந்த குடிநீர் குழாய் சரி செய்து குடிநீர் சீராக வருவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன் பேரில் சாலை மறியல் செய்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த குடிநீர் பிரச்சினை இங்கு மட்டுமல்ல புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மற்றும் கிராமப்புற ங்களிலும் இந்த குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகரி த்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- கொடிவேரி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 24,504 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்ப்பித்தது.
அதை தொடர்ந்து இன்று காலை கொடிவேரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் மதகை திருகி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது தண்ணீர் சீறிப்பாய்ந்து வாய்க்கால்களில் சென்றது.
இந்த தண்ணீரானது இன்று முதல் 31.4.2024 வரை 120 நாட்களுக்கு 7,776 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
- சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே திருப்பதி கார்டன் பகுதி உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி விடுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பணியாள ர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
எங்கள் பகுதியில் சாலை குண்டும், குழியமாக இருப்பதால் எங்கள் சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. அவசரத்திற்கு சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.
இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்த நாயக்க ன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 120-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 120-ம் அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். ,
இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக் குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபா ரிகள் தெரிவித்தனர். திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி உள்பட பல வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.
- வகுப்பறை கட்டிடத்தில் மாதிரி சந்தையில் 21 கடைகளை அமைத்தனர்.
- கூவி, கூவி அழைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தமிழில் "சந்தை" என்ற பாடத்தை நேரடியாக விளக்கவும், கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவைகள் கணக்கீடு உள்ளது.
வகுப்பறை கற்பித்தலை விட இதை மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்வதற்காக பள்ளியில் தலைமைய ஆசிரியர் வேல்முருகன் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் ரவி ஏற்பாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களை ஒரு நாள் "மாதிரி சந்தை" அமைக்க அறிவுரை கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், தேங்காய்கள், நெல்லிக்கனிகள், கொய்யா பழங்கள், வாழை பழங்கள், பூக்கள் மற்றும் வீட்டில் உள்ள முட்டைகள், அவித்த கடலை போன்ற பொருள்களை மாணவர்கள் வியாபாரத்துக்காக பள்ளிக்கு கொண்டு வந்தனர்.
வகுப்பறை கட்டிடத்தில் அவற்றை வைத்து மாதிரி சந்தையில் 21 கடைகளை அமைத்தனர். அவற்றை மாணவர்கள் மற்றவர்களிடம் விற்பனை செய்தனர்.
செயற்கை உரம் இல்லாமல் விளைந்த பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியமான பொருட்கள் என்று பல வகையில் தங்கள் பொருள்களின் தரத்தை எடுத்துக் கூறி விற்பனை செய்தனர்.
மற்றவர்களை கூவி, கூவி அழைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தனர்.
மற்ற வகுப்பு மாணவர்களும் சந்தையை பார்வையிட வந்து தங்களுக்கு தேவையான காய்கள், கனிகள், கீரைகள் போன்ற பொருட்களை விலை பேரம் பேசி வாங்கினார்கள்.
அவர்கள் கூறிய விலைக்கு பணம் கொடுத்து கணக்கிட்டு மீதத்தொகையை மாணவர்கள் திரும்ப பெற்றனர்.
விற்காமல் மீதம் இருந்த காய்கறிகளை சத்துணவு சமைப்பதற்கு மாணவர்கள் மனமுவந்து அளித்தனர்.
இந்நிகழ்வின் மூலம் தமிழ் துணைப்பாடம் சந்தை மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் உள்ள பாடப் பொருள்களை மாண வர்கள் ஆர்வத்துடனும் எளிதாகவும் கற்றுக் கொள்வதோடு வாழ்வியலுக்கு தேவையான கற்றல்களை மாணவர்கள் பெறுவதாக பட்டாதாரி ஆசிரியர் ரவி தெரிவித்தார்.
- கும்பாபிஷேகம் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேததி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா குதி, வாஸ்து பூஜை திசா ஹோமம், 4 காலை யாக பூஜை, விக்னேஸ்வரா பூஜை, யாகசாலை ப்ரவேசம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,
அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மகா கும்பாபிஷேகம் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் புனித நீரை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூல விநாயகர், பாலமுருகன், பெரிய நாயகி சமேத கைலாசநாதர் பெரு மானுக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் கற்பூர ஆராதனை காட்ட ப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் அனைத்து வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிகரித்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 611 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.42 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.79அடியாகவும் உள்ளது.
- இன்று ஒரே வழித்தடத்தில் இயங்கக்கூடிய 2 நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.
- பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனை யில் தினமும் 82 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர புற பஸ்கள் 23, புறநகர் பஸ்கள் 59 இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரே வழி த்தடத்தில் இயங்கக்கூடிய கே.3, பி.13 என்ற நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.
இந்த பஸ் கோவிலூர், எண்ணமங்கலம், கவுந்தப்பாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும்.
இந்த நிலையில் 2 பஸ்களும் காலை முதல் இயங்காதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் மட்டும் அடிக்கடி பஸ் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் முக்கிய நாட்களில், விசேஷ நாட்களில் இது போன்று பஸ்கள் வராமல் செய்வது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
இது குறித்து கிளை மேலாளர் தெரிவிக்கையில், அந்தியூர் அரசு பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
- பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.
- போலீசார் சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகில் உள்ள கம்புளியம்பட்டி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் பாரதி. இவர் தனது கணவர் குமாரசாமி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்த தனது மகன் பாலமுருகனுடன் (12) தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பால முருகன் சாணார்பாளை யத்தில் உள்ள ஒரு தோட்ட த்து கிணற்றில் நீச்சலடித்து விளையாடி வருவது வழக்கம். அது போலவே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி பாலமுருகன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளான்.
குளித்து முடித்து விட்டு மேலே வரும்போது கிணற்று படியில் யாரோ கழட்டு விட்ட செருப்பு ஒன்று பாலமுருகனின் கால்பட்டு கிணற்றுக்குள் நின்று கொண்டிருந்த மேற்கு சாணார்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ் என்கிற கோபால் (27) என்பவர் மீது விழுந்தது.
இதனால் கோபமுற்று கோபால் யாருடா என்மீது செருப்பை தள்ளிவிட்டது என கேட்க, பாலமுருகன் தனது கால் பட்டு தெரியா மல் செருப்பு விழுந்து விட்டது என கூறினான்.
பின்னர் நானே வந்து அந்த செருப்பை எடுத்து வருகிறேன் என்றும் கூறி கிணற்றுக்குள் குதித்து செருப்பை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு அருகில் பாலமுருகன் நீந்தி வரும்போது, கோபத்தில் இருந்த சதீஷ் என்கிற கோபால், பாலமுருகனை மேலே வர விடாமல் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார்.
இதனால் பாலமுருகன் மூச்சு திணறி இறந்து விட்டார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் என்கிற கோபாலை கைது செய்தனர். இது தொடர்பாக பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண பிரியா, சதீஷ் என்கிற கோபாலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபரா தமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் திருமலை ஆஜராகி வழக்கை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்