என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode Textile Market"
- ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.
- ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை யானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கமாகும்.
கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபா ரிகள், உள்ளூர் சில்லரை வியாபா ரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆடிப்பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:
ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. ஆடி மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜவுளி மார்க்கெட்டில் சீசன் தொடங்கி உள்ளது.
குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.
வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் முழுமையாக வரும்.
இவ்வாறு அவர் கூறினர்.
- இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை.
- இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை உலக புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
விடிய விடிய நடை பெறும் இந்த ஜவுளி சந்தை யில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து மொத்த விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டரின் பெயரில் ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் உள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.
இந்நிலையில் ஆனி மாதம் பிறந்ததையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது என்பதால் விசேஷம் தொடர்பான வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் வந்திருந்தனர். இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடை பெற்றது. சில்லரை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.
இந்த மாதம் முழுவதும் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். ஆடி மாதம் பிறந்தால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த னர்.
- ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
- மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கே தினசரி கடைகள் மற்றும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா மகாராஷ்டிரா, கேரளா போன்ற வெளி மாநிலத்தி லிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு துணி மணிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகளும் துணிகளை வாங்கி செல்கின்றனர்.
இதனால் வார சந்தை நடைபெறும் நாட்களில் ஈரோடு ஜவுளி சந்தை களை கட்டியிருக்கும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலைகள் குறைவாக விற்கப்படு வதால் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய முதல் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியா பாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.
ஆனால் அதே நேரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே காட்டன் தொடர்பான துணிகள் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குறிப்பாக காட்டன் சேலைகள், காட்டன் சுடிதார்கள், குழந்தைகளுக்கான காட்டன் கவுன்கள், காட்டன் வேட்டி, துண்டு வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த 2 வாரமாக மொத்த வியாபாரத்தை விட சில்லரை வியாபாரம் நன்றாக உள்ளது என்றனர்.
- திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது.
- இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ–மனையில் மாரடைப்பால் இறந்தார்.
அவரது திடீர் இறப்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருமகன் ஈவெரா உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தினசரி ஜவுளி சந்தையில் 260-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று பன்னீர்செல்வம் பார்கில் ஜவுளி வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
- குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த 2 வாரங்களாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஜவுளி வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய மொத்த வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. வெளிமாநில ஆர்டர்கள் ஓரளவு கை கொடுத்தது. இந்தநிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை.
குறிப்பாக வெளிமாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. சில்லரை விற்பனை மட்டுமே ஓரளவு நடைபெற்றது.
குளிர்கால ஆடைகள், பேர்வை உள்ளிட்டவைகள் விற்பனை அதிக அளவில் காணப்பட்டது. இதேநிலையில் மழை நீடித்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில் கடந்த தீபாவளியையொட்டி ஜவுளி வியாபாரம் களை கட்டியது. வெளி மாநில வியாபாரிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.
ஆனால் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த வாரமும் ஜவுளி சந்தை கூடியது. தொடர் மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். எப்போதும் கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.
மழை காரணமாக இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் சில வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வெறும் 10 சதவீதம் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது.
அதேநேரம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக சொட்டர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
சொட்டர் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் கம்பளி ஆடைகள் விற்பனையும் நன்றாக இருந்தது.
- ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
- சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கி ழமைகளில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்வார்கள். கடந்த சில வாரங்களாக வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வரும் 8-ந் தேதி ஓணம் பண்டிகை வருவதையொட்டி புதிய ஜவுளி ரகங்கள் வரத்தா கியுள்ளன. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி இன்று ஏராளமான கேரளா வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக மற்ற வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.
இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே இருந்தது. இன்று நடந்த சந்தையில் சில்லரை வியாபாரம் 40 சதவீதமும், மொத்த வியாபாரம் 30 சதவீதமும் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த வாரம் ஓணம் பண்டிகை நெருங்க உள்ளதால் வியாபாரம் களைக்கட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
- ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.
இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்