search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ex-minister"

    • கட்சிப் பணிகளை விரைவுபடுத்த "கள ஆய்வுக் குழுவினர்" நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கட்சி பணிகளை விரைவுப்படுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்' நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும். புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு' கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அ. அருணாசலம்.

    மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.
    • க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    2001ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.

    கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார். க.சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, க.சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் பதிவு.
    • இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி ஜெயக்குமார் பதிவு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?

    மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி" என பதிவிட்டுள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த கலரத்தில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்வளவு கலவர சூழலிலும் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவில்லை.

    இவை இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    • நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு.
    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும்.
    • பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள்.

    கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

    அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார். என்பதற்க்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பரபடுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்.

    மேலும், உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை என்ணி வேதனை அடைகிறேன்.

    இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை, சக கலைஞனாகவும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

    முன்குறிப்பு :- உங்களின் அறிவற்ற செயலினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால் உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிரந்தரபொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியில் கூறியுள்ளார்.
    • 5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும் என்றும் பேசினார்.

    மதுரை

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் வெற்றி சரித்திரத்தில் மகுடமாக மற்றும் ஒரு வெற்றியை நீதி அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொருத்த மட்டில் மக்கள் பணியே மகேசன் பணி என்று எம்.ஜி.ஆர். சொன்னது போல மக்களுக்காகவே இந்த இயக்கம் அர்ப்ப ணிக்கப்பட்டது என்று அம்மா சொல்வார்கள். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அனுபவத்தாலும், அம்மாவி டம் கற்ற பாடத்தினாலும் அ.தி.மு.க.வை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தற்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் 5 மாவட்ட மக்களுடைய நீராதார பிரச்சினையாக இருக்கும் முல்லை பெரியாறு பிரச்சினைக்காக கேரளா செல்வதாக செய்தித்தாள்களில் படித்தேன்.

    முதலமைச்சரின் பயணம் விளம்பரமாக இல்லாமல் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும்.

    அம்மா வழியில் ஆட்சி நடந்த போது உயர்த்தப்பட்ட முல்லை பெரியாரின் நீர்மட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட முடியாத அவல நிலை உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்துக்கு தந்தார். ஏனென்றால் மறைந்த முதலமைச்சர் அம்மாவின் மாணவர் அவர். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர். தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர்.

    எனவே நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.கட்சி பிரச்சினையில் தி.மு.க.வும் மூக்கை நுழைக்கிறது.

    அதன் அரசியல் நாளிதழில் எடப்பாடி பழனிசாமி பற்றி அவர்கள் விமர்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆரை விமர்சித்தது தான் அந்த நாளிதழ். எங்களுக்கு அது பெரிது அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி உள்ள ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
    • நிகழ்ச்சியை ரத்து செய்து வழியிலேயே திரும்பியதால் பரபரப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி அரசு தொடக்க பள்ளிகளுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா அ.தி.மு.க. பரிந்துரையின் பெயரில் மேஜை நாற்காலி வழங்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொள்வதாக இருந்தது.

    இந்நிலையில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., ஆலங்குடி தொகுதிக்கு வந்து மேஜை நாற்காலிகள் வழங்கினால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் தி.மு.க.வை சேர்ந்த திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது கீரமங்கலம் போலீசார், அவருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றார். இதனை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சியும் ரத்த செய்யப்பட்டது.

    ஆனால் விஜயபாஸ்கர் பள்ளி நிகழ்ச்சிக்கு வருவார் என்று கொத்தமங்கலம் பள்ளி முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் காத்திருந்து ஏமாற்றத்துடுன் திரும்பி சென்றனர்.

    இது குறித்து விசாரித்தபோது, கட ந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ. மெய்யநாதன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவரை அழைக்காமலேயே தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் அ.தி.மு.க.வினர் நடத்தினர்.

    ஆலங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மெய்யநாதன் வழங்கியதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி சைக்கிள் வழங்கியதாக ஆலங்கு டி, கீரமங்கலம் காவல் நிலையத்தில் 2019 வருடத்தில் மெய்யநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தற்போது மெய்யநாதன் அமைச்சராக இருக்கும்போது அவர் இல்லாமல் அ.தி.மு.க.வினர் நிகழ்ச்சி நடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்றனர்.

    இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரி கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். #GonenSegev
    ஜெருசலேம்:

    இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.  #GonenSegev

    முக ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #edappadipalanisamy #mkstalin

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அடுத்த வினாடியே ஜெயிலுக்கு போவார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று அவர் கனவு காண்கிறார். அது நடக்காது. ஆனால் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்கள் அதுவரைக்கும் வெளியில் இருப்பார்களா? என்று பாருங்கள்.

    ஏனென்றால் அவர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். ஏற்கனவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்குகளை மறைப்பதற்காக அ.தி.மு.க. அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது என்ன வழக்கு தொடரப்போகிறார்? என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். எங்களுக்கு மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பார்க்கிறார்.

    மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினருக்கு தான் பயம் இருக்கிறது. ஏற்கனவே தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்கள் மீதான வழக்கு தனி கோர்ட்டில் இப்போது விசாரணையில் இருக்கிறது. அந்த விசாரணையில் கூட முதன் முதலில் மு.க.ஸ்டாலின் தான் விசாரிக்கப்பட்டார்.


    எனவே ஸ்டாலின்- முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்களே தவிர, அ.தி.மு.க. அமைச்சர்கள் பற்றி அவர் தெரிவித்துள்ள யூகங்கள் ஒரு போதும் வெற்றி பெறாது.

    என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கூட பொய்யானது. அதனால் தான் நான் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய சார்பாக வக்கீல்களை வைத்து வாதாடினேன். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு, தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கை தடை செய்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #mkstalin 

    ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மந்திரியிடம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்ற வழக்கில் ஒரு கோர்ட்டு விசாரணை நடத்தி உள்ளது. இதைக் கண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளது. #SupremeCourt #MinisterYogendraSao
    புதுடெல்லி:

    ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரி யோகேந்திர சாவ். அவரது மனைவி நிர்மலா தேவி. இவர் எம்.எல்.ஏ. ஆவார். இவர்கள் 2 பேரும் அங்கு 2016-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான குற்ற வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் தங்கி இருக்க வேண்டும், வழக்கு விசாரணை தவிர்த்து வேறு எந்த காரணத்தை கொண்டும் ஜார்கண்ட் செல்லக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் அளித்தது.



    இவர்கள் மீதான வழக்கில் ஹசாரிபாக்கில் உள்ள விசாரணை நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ‘வாட்ஸ் அப்’ மூலம் விசாரணை நடத்தி குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது. அதுவும், இவர்கள் 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த நீதிமன்றம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ‘வாட்ஸ் அப்’ மூலம் தங்கள் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மந்திரி யோகேந்திர சாவ், அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணையை ஹசாரிபாக் நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல்.என்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாட்ஸ் அப் மூலம் வழக்கு விசாரணையா?” என கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது நீதிபதிகள், ஜார்கண்ட் மாநில அரசின் சார்பில் ஆஜரான வக்கீலிடம், “ஜார்கண்டில் என்ன நடக்கிறது? இந்த நடைமுறையை அனுமதிக்க முடியாது. நீதி நிர்வாகம் செய்வதை மிகத்தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என காட்டமாக கூறினர்.

    மேலும், “வாட்ஸ் அப் வழியான விசாரணையின் வழியில் நாங்கள் இருக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்ன மாதிரியான விசாரணை? இது என்ன தமாஷா?” என கேட்டனர்.

    இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது ஜார்கண்ட் அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “யோகேந்திர சாவ் ஜாமீன் நிபந்தனையை மீறி, பல முறை போபாலை விட்டு வெளியேறி உள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணை தாமதம் ஆகிறது” என கூறினார்.

    ஆனால் அதை நிராகரித்த நீதிபதிகள், “அது வேறு பிரச்சினை. ஜாமீன் நிபந்தனையை அவர் மீறுகிறார் என்றால் ஜாமீனை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யுங்கள். ஜாமீன் நிபந்தனையை மீறுகிறவர்கள் மீது எங்களுக்கு இரக்கம் வராது” என கூறினர்.  #SupremeCourt #MinisterYogendraSao
    ×