என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "exam result"
- 90 காலி பணியிடங்களுக்கு நட்நத தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
- குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆவர்.
குரூப் 1 தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என 2 தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே.
இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்து 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
90 காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1 முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.
- 12ம் தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி (நாளை) வெளியாகும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 14.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.08.2024 அன்று www.dgetngovin என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை
14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை யுபிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெற்றது.
- தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும்.
செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.
- கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
கோவை:
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி எஸ்.எஸ்.குளம் பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது.
இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை 524 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்களும், 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.
இன்று தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 636 பேரில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69, மாணவிகள் தேர்ச்சி வீதம் 96.08 என மொத்தமாக மாவட்டத்தில் 92.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.
இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.
11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.
ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 1,140 பேர் எழுதினார்கள். இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SSLC #ExamResult
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. #PlusTwo #ExamResult
அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் ( www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வேண்டுகோள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதேநேரத்தில், மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவு எடுக்ககூடாது.தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் (ஹெல்ப் லைன்) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று பெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மன சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #PlusTwo #ExamResult
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.
இதனால் மாணவர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதியும் வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார். அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
1998-ம் ஆண்டு வரை தேர்வு முடிவு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர்.
2003-ம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.
கடந்த ஆண்டு (2017) அரசு தேர்வுத்துறை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.
இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. பள்ளிகள் வழங்கி உள்ள இணையதள முகவரியில் (இ.மெயில்) தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை பதிவேற்றம் செய்ய உள்ளது.
மேலும், தேர்வுத்துறை அளிக்கும் முகவரியில் தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காகிதம் இல்லா பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது. #Plus2examresults #ExamResult
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்