search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "excellence"

    • மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள்.
    • தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    பெருமாளை சேவித்த பிறகு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய தலையில் வைக்கும் சடாரி என்ற மகுடத்தை கவனித்து பார்த்தால் அதன் மேல் இரண்டு பாதச் சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதிப்புக்குரிய திருமுடியின் மீது திருவடிகள் ஏன் இடம் பெற்றிருக்கிறது. அதிலும் பெருமாள் ஆலயங்களில் அதனை பயன்படுத்துவதற்கான காரணத்தை அறிவோம்.

    ஒரு சமயம் தாம் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் முன் தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார்.

    திடீரென தன்னை சந்திக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு பாம்பு படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றவர் வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளையே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. அவை பாதுகைகளை பார்த்து கோபத்துடன், 'கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் நீ எப்படி இங்கு இருக்கலாம்?' என்று கேட்டன.


    ''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள். அவற்றைக் காதில் வாங்காமல், ''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும். எனவே, ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்திற்கு போய்விடுங்கள்'' என்று கோபத்துடன் சொன்னது கிரீடம்.

    அதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படி சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள். தவிர, உங்களை தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று பதிலுக்கு வாதித்தனர்.

    கிரீடத்துடன் சங்கு, சக்கரமும் சேர்ந்து கொண்டதால் தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாமல் பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன. பகவான் வந்ததும் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி பாதுகைகள் முறையிட்டன. ''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல் கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு புனிதமான உங்களை தூற்றியதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.


    தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரசப்பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும், சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது'' என்றார்.

    அதன்படியே ஸ்ரீராமாவதாரத்தில் அவரது பாதுகைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன. திருமுடி ஒருவகையில் உயர்ந்தது எனில், பெருமாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.

    இன்னும் சொல்லப்போனால் பாதம் பற்றி சரணாகதி அடையும் விதமாக நமது பார்வை பெருமாளின் திருப்பாதங்களையே முதலில் நாடும். பாதச்சுவடுகள் தாங்கிய சடாரி எனும் மகுடத்தை நம் தலையில் வைத்துக் கொள்ளும்போது நம்முடைய, 'நான்' என்று ஆணவம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாத்தலின் பின்னணியில் உள்ள காரணம்.

    • தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
    • தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் , வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்கள வருகிற 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே அஞசல் வழியில் , நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதி யாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்ப டுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ,ஆரதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. கபிலர்மலையில் ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி,பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×